அமெரிக்கன் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
10 Jan 2026, 2:48 pm
<p><strong>அமெரிக்கன் கல்லூரியில் பட்டமளிப்பு விழா</strong></p>
<p>மதுரை, ஜன.10- 144 ஆண்டுகால பாரம்பரி யமிக்க மதுரை அமெரிக்கன் கல்லூரியில் மாணவர்களுக் கான பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. மதுரை-இராமநாதபுரம் திரு மண்டல பேராயரும், அமெரிக் கன் கல்லூரி ஆட்சி மன்ற குழுவின் தலைவருமான முனைவர் டி.ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் தலைமை யில் நடைபெற்றது. கல்லூரி முதல்வரும் செயலருமான முனைவர் ஜே. பால் ஜெயகர் வரவேற்றார். தமிழ்நாடு மாநில சிறு பான்மை ஆணைக்குழு தலைவர் அருட்தந்தை சி.ஜோ அருண் பேசினார். அவர் பேசு கையில், மாணவர்கள் தாங் கள் பெற்ற கல்வி மற்றும் அறிவை சமூகத்தின் நல னுக்காக பயன்படுத்த வேண் டும் என வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து சான்றிதழ்கள் வழங்கப்பட் டன. இவ்விழாவில் 1,898 இளங்கலை மாணவர்களும், 684 முதுகலை மாணவர் களும் என மொத்தம் 2,582 மாணவர்கள் பட்டம் பெற்ற னர். விழாவில் துணை முதல்வர் சாமுவேல் அன்பு செல்வன், நிதிக்காப்பாளர் எம்.பியூலா ரூபி கமலம், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி எஸ்.இஸ்ரேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
