முந்தய பக்கம்

அரசு பள்ளி தலைமையாசிரியருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா

12 May 2026, 10:39 pm
அரசு பள்ளி தலைமையாசிரியருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா
<p><strong>அரசு பள்ளி தலைமையாசிரியருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா</strong></p><p>வேடசந்தூர், மே 12- திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாலுகா இடையக்கோட்டை நேருஜி அரசு மேல்நிலைப் பள்ளி யில் தலைமை ஆசிரியராக ஜான் வில்பன் பொன்ராஜ் பணியாற்றினார். ஓய்வு பெற்றதை முன்னிட்டு பணி நிறைவு பாராட்டு விழா பொதுமக்கள் சார்பில் தனியார் திருமண மண்ட பத்தில் நடைபெற்றது விழாவிற்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்லமுத்து தலைமை யேற்று பேசினார். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன்னாள் தலைவர் செல்வராஜ் முன் னிலை வகித்து பேசினார். விழாவில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சண்முகநாதன், கல்வி குழு தலைவர் மல்லீஸ்வரி, பெற்றோர் ஆசிரியர் குழு தலைவர் முகமது இஸ்மா யில் மற்றும் ஊர் முக்கி யஸ்தர்கள், ஆசிரியர், ஆசிரி யைகள் உள்ளிட்ட ஏரா ளமானோர் பங்கேற்று வாழ்த்திப் பேசினர். பணி நிறைவு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர் ஜான் வில்பன் பொன்ராஜ் அனைவரும் நன்றி தெரி வித்து பேசினார். விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவி களின் வில்லுப்பாட்டு உள் ளிட்ட பல்வேறு கலை நிக ழ்ச்சிகள் நடைபெற்றது.</p>
Share
FacebookXWhatsAppTelegram