டெலிகிராமிற்கு மீண்டும் நோட்டீஸ்
4 Jul 2026, 8:26 pm
<p><strong>டெலிகிராமிற்கு மீண்டும் நோட்டீஸ்</strong></p><p>திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் ஓடிடி தள உரிமையா ளர்கள்,”டெலிகிராம் செயலி மூலம் தங்கள் தயாரிப்பு திரைப்படங் கள், வெப் தொடர்கள், ஓடிடி உள்ளடக் கங்கள் திருட்டுத்தனமாக பகிரப்படு கிறது” என புகார்கள் அளித்துள்ளனர். இதுவரை கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட புகார்கள் ஒன்றிய தகவல் மற்றும் ஒலி பரப்பு அமைச்சகத்துக்கு சென்றுள்ள தாக கூறப்படுகிறது. இந்நிலையில், திரைப்படங்கள் மற்றும் ஓடிடி உள்ளடக்கங்கள் சட்டவிரோ தமாகப் பகிரப்படுவதைத் தடுக்க உடன டியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் டெலிகிராம் நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவ டிக்கைகள் குறித்த அறிக்கையை 15 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என டெலிகிராம் நிறுவனத்திற்கு ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, 2 நாட்களுக்கு முன்பு யூசர்நேம் தொடர்பாக டெலிகிராம் நிறுவ னத்திற்கு ஒன்றிய அரசு அனுப்பியி ருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.</p>
