முந்தய பக்கம்

தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

7 Oct 2026, 8:56 pm
தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக  அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
<p><strong>தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p><p>திருவில்லிபுத்தூர், அக்.7-பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர் களுக்கு ஆதரவாக, திருவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி அலுவலர் சங்கம் சார்பில் புதன்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அரசு ஊழியர் சங்க திருவில்லிபுத்தூர் கிளைச் செயலாளர் மு.பாலமுருகன் தலைமை வகித்தார். மாவட் டச் செயலாளர் கருப்பையா விளக்கிப் பேசினார். ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க (சிஐடியு) மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணியன் நிறைவு செய்து பேசினார்.</p><p>இதில் நகராட்சி நகரமைப்பு அலுவலர் வெங்கடேசன், சுகாதார அலுவலர் கந்தசாமி மற்றும் அலுவலகஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram