தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஏகாதிபத்தியத்தின் முரண்டு;சிதையும் பேச்சுவார்த்தை

13 Apr 2026, 5:30 am
ஏகாதிபத்தியத்தின் முரண்டு;சிதையும் பேச்சுவார்த்தை

ஏகாதிபத்தியத்தின் முரண்டு;சிதையும் பேச்சுவார்த்தை

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற அமெரிக்க - ஈரான் நேரடிப் பேச்சுவார்த்தைகள் எவ்வித உடன்பாடுமின்றித் தோல்வியில் முடிந்துள் ளன. 1979-க்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற மிக உயர்மட்ட அளவிலான இந்தச் சந்திப்பு, மேற்கு ஆசியாவில் அமைதியை உருவாக்கும் என உலக மக்கள் நம்பியிருந்த வேளையில், அமெரிக்காவின் பிடிவாதப்போக்கு அந்த நம்பிக்கையைச் சிதைத்துள்ளது.

அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ், இந்தப் பேச்சுவார்த்தையில் உடனடித் தீர்வு எட்டப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். அமைதிக்கான வழிகளைத் தேடுவதற்குப் பதிலாக, பேச்சுவார்த்தை தோல்வியடைந்த அடுத்த சில நிமிடங்களிலேயே, ஹோர்முஸ் நீரிணையை அமெ ரிக்கக் கடற்படை முற்றுகையிடும் என டொனால்டு டிரம்ப் அறிவித்திருப்பது ஏகாதிபத்தியத்தின் அப் பட்டமான மிரட்டல் அரசியலாகும். இது சர்வதேசக் கடல்வழிப் போக்குவரத்துச் சட்டங்களை அப்பட்ட மாக மீறும் செயலாகும். உலகப் பொருளாதா ரத்தையே முடக்கும் இத்தகைய முற்றுகை அறிவிப்பு கள் டிரம்ப்பின் பொறுப்பற்ற எதேச்சதிகாரப் போக்கை வெளிப்படுத்துகின்றன.

மறுபுறம், பேச்சுவார்த்தைகளின் தோல்வி யைச் சாதகமாக்கிக் கொண்ட இஸ்ரேல், ஞாயிற்றுக் கிழமை மீண்டும் லெபனான் மீது தனது கொடூரத் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமைதி முயற்சிகள் ஒருபுறம் நடக்கையில், மறுபுறம் அப்பாவி மக்களைக் கொன்று குவிக்கும் இஸ்ரேலின் இந்த இனப்படுகொலைத் தாக்குதல்களை அமெரிக்கா தடுத்து நிறுத்தத் தவறுவது, வாஷிங்டனின் இரட்டை வேடத்தையே காட்டுகிறது. லெபனான் மற்றும் இஸ்ரேல் அதிகாரிகள் வாஷிங்டனில் சந்திக்கத் திட்ட மிட்டுள்ள அதே வேளையில் தாக்குதல்கள் தீவிரப் படுத்தப்படுவது ஒரு திட்டமிட்ட நாடகமாகும். இது பாதிக் கப்பட்டமக்களை மேலும் ஒடுக்கும் தந்திரமே தவிர வேறல்ல.

மேற்கு ஆசியாவில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்தத் துடிக்கும் அமெரிக்கா, ஈரானின் இறையாண்மை மிக்கக் கோரிக்கைகளை ஏற்க மறுப்பதன் மூலம் இப்பகுதியை மீண்டும் ஒரு பெரும் போரை நோக்கித் தள்ளுகிறது. அமைதிப் பேச்சு வார்த்தை என்பது ஏகாதிபத்தியத்தைப் பொறுத்த வரை ஒரு கண்துடைப்பு நாடகமாகவே இருந்துள்ளது. ஈரானின் 10 அம்ச நியாயமான கோரிக்கைகளைப் பரி சீலிக்க மறுப்பதன் மூலம், சர்வதேச அமைதிக்கு மிகப் பெரிய முட்டுக்கட்டையாக அமெரிக்காவே இருக் கிறது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது.

இந்தச் சூழலில், பாகிஸ்தான் முன்னெடுத்த அமைதி முயற்சிகள் முறியடிக்கப்பட்டிருப்பது சர்வ தேச சமூகத்திற்கு விடப்பட்ட சவாலாகும். ஏகாதி பத்தியத்தின் இத்தகைய முரட்டுத்தனமான முற்றுகை மிரட்டல்களும், இஸ்ரேலின் தொடர் அக்கிரமங்க ளும் முறியடிக்கப்பட வேண்டும். வல்லரசுகளின் பிடிவாதத் திற்கு அப்பாவி மக்களின் உயிர்கள் பலியாவதை உலக நாடுகள் இனியும் வேடிக்கை பார்க்கக்கூடாது.

மேற்கு ஆசியாவின் அமைதி என்பது ஆதிக்க சக்திகளின் வெளியேற்றத்திலும், ஒடுக்கப்படும் மக்களின் இறையாண்மையை அங்கீகரிப்பதிலுமே அடங்கியுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.