மாற்றுத்திறனாளிகள் நலன் குறித்த ஆளுநர் உரைக்குவரவேற்பு: பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்க கோரிக்கை
18 Jun 2026, 10:37 pm

மாற்றுத்திறனாளிகள் நலன் குறித்த ஆளுநர் உரைக்குவரவேற்பு: பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்க கோரிக்கை

சென்னை, ஜூன் 18- தமிழக வெற்றிக்கழகம் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாகச் சட்டமன்றத்தில் இன்று வாசிக்கப்பட்ட ஆளுநர் உரைக்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் (TARATDAC) வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அச்சங்கத்தின் தலைவர் தோ.வில்சன், பொதுச் செயலாளர் பா.ஜான்சிராணி ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

உரிமைகளை உறுதி செய்ய சிறப்பு கவனம்

மாற்றுத்திறனாளிகள் நலன் உள்ளிட்ட அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய மாநிலமாக இந்த அரசு விளங்கும் என்ற ஆளுநர் உரையின் அறிவிப்பைச் சங்கம் உளப்பூர்வமாக வரவேற்கிறது. மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், சமத்துவம், சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு திகழும் என்றும், டிஜிட்டல் மற்றும் உள்கட்டமைப்பில் அணுகல் வசதி ஏற்படுத்தப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. மேலும், 4 சதவீத சட்டப்படியான இடஒதுக்கீடு மற்றும் அவர்களின் முன்னேற்றத்திற்குச் சிறப்பு கவனம் செலுத்தப்படும் என்ற வாக்குறுதியும் வரவேற்கத்தக்கது.

பட்ஜெட்டில் கூடுதல் நிதி தேவை

இவ்விஷயங்கள் வெறும் வாக்குறுதிகளாக நின்றுவிடாமல், மாற்றுத்திறனாளிகளின் சட்டபூர்வ உரிமைகளை நிறைவேற்ற வரவிருக்கும் தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கையில் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். தேர்தல் வாக்குறுதியான மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை ரூ.3,000 ஆக உயர்வு, அரசுப் பள்ளிகளில் சிறப்பு ஆசிரியர்கள் நியமனம் ஆகியவற்றை நிறைவேற்ற, பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்க தவெக அரசும், தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களும் உரிய கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.