தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்காத ஆளுநர் அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்

7 May 2026, 10:09 pm
விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்காத ஆளுநர் அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்
<p><strong>விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்காத ஆளுநர் அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்</strong></p><p>சென்னை, மே 7- தனிப்பெரும் கட்சியான தவெக, சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க அரசியலமைப்புச் சட்டப்படி ஆளுநர் அவகாசம் வழங்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், பதவியேற்புக்கு முன்பே பெரும்பான்மையை நிரூபிக்க நிர்பந்திப்பது அரசியலமைப்பு நெறிக்கு ஏற்புடையதல்ல என்று தெரிவித்துள்ளார். எஸ்.ஆர். பொம்மை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகளில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு களின் அடிப்படையிலும், அரசி யலமைப்பை மதித்தும் ஆளுநர் நடக்க வேண்டும் என்று வீர பாண்டியன் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார். பிடிவாதத்தின் பின்னணியில் சதி? தனிப்பெரும் கட்சியான தவெகவை ஆட்சி அமைக்க அழைக்காமல் ஆளுநர் பிடிவாத மாக இருப்பது, அமித்ஷாவின் தலையீட்டை உணர்த்துகிறது என்றும், இதனை தமிழகத்தில் அனு மதிக்க மாட்டோம் என்றும் விசிக தலைவர் தொல். திருமாவள வன் தெரிவித்துள்ளார். சட்டப்பே ரவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு கூறுவதே சரியான வழி என்றும் கூறியுள்ளார். மக்களின் ஆணையை மதிக்க வேண்டும்! நடிகர் கமல்ஹாசன், ஆளுநரின் நிலைப்பாடு மக்களின் ஆணையை அவமதிப்பதாகும் என்று கண்டனம் தெரிவித்துள்ளார். ஆளுநரின் செயல் அரசிய லமைப்புக்கு எதிரானது என்றும், விஜய் மக்கள் ஆணை பெற்றுள் ளார், சட்டப்பேரவையில் தனது உரிமையை நிலைநாட்ட அவருக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்றும் நடிகர் பிரகாஷ் ராஜ் பதிவிட்டுள்ளார். பாஜக மூத்த தலைவரும், ஒன்றிய முன்னாள் அமைச்சருமான சுப்பிரமணியசாமி, ஜனநாயக மரபுகளின்படி தனிப்பெரும் கட்சியின் தலைவரான விஜயை உட னடியாக அழைத்து அமைச்சரவை அமைக்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதனிடையே, “எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் குடியரசுத் தலைவர் ஆட்சியுடன் கடுமையான அமலாக்க நடவடிக்கைகளுடன் புதிய தேர்தல் நடத்துவதே சிறந்த தீர்வாக இருக்கும்” என்று பாஜக ஆதரவாளரான சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு கூறியுள் ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.