புதுச்சேரியில் 77-வது குடியரசு தின விழா ஆளுநர் கைலாஷ் நாதன் கொடியேற்றினார்
27 Jan 2026, 3:28 pm
<p><strong>புதுச்சேரியில் 77-வது குடியரசு தின விழா ஆளுநர் கைலாஷ் நாதன் கொடியேற்றினார்</strong></p>
<p>புதுச்சேரி, ஜன. 27- நாட்டின் 77-வது குடியரசு தின விழா வண்ணமிகு கலை நிகழ்ச்சிகளுடன் புதுச் சேரியில் கோலாகலமாக கொண்டா டப்பட்டது. புதுச்சேரி கடற்கரை காந்தி சிலை எதிரே நடைபெற்ற விழாவில் துணை நிலை ஆளுநர் டாக்டர் கைலாஷ் நாதன் பங்கேற்று தேசிய கொடியேற்றி, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை பார்வை யிட்டார். அதனைத் தொடர்ந்து முப்படை ராணுவ வீரர்கள் மற்றும் பல்வேறு பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு மரியா தையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து சிறப்பாக விளங்கிய வர்களுக்கு சுழற் கேடயங்களையும், பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார். விழாவில் முதல்வர் ரங்கசாமி, சட்டப் பேரவை தலைவர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், ஜெயக்குமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலர் சரத்சௌகான், அரசு செயலர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள், விடுதலைப் போராட்ட வீரர்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.</p>
