ஆளுநரின் தன்னிச்சையான ஆய்வு அரசியல் சாசனத்திற்கு எதிரானது!
3 Jul 2026, 9:09 pm

ஆளுநரின் தன்னிச்சையான ஆய்வு அரசியல் சாசனத்திற்கு எதிரானது!

கிருஷ்ணகிரி, ஜூலை 3- ஆளுநரின் தன்னிச்சையான ஆய்வு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார். கிருஷ்ணகிரியில் நடைபெற்ற சுங்கச்சாவடி முற்றுகைப் போராட்டத்தின் போது, செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

அனுமதிக்க மாட்டோம்

மதுரைக்குச் சென்ற ஆளுநர், அங்கு அரசு அதி காரிகளுடன் தன்னிச்சையாக ஆலோசனை நடத்தி யிருப்பது குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி னர். அதற்குப் பதிலளித்த பெ. சண்முகம், “ஏற்கனவே இருந்த ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசுக்கு எதிராக ஒரு போட்டி அரசாங்கம் நடத்திக் கொண்டிருந் தார். அதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யும் திமுக அரசும் கடுமையான போராட்டங்களை நடத்தி இருக்கிறோம். தற்போதைய ஆளுநருக்கும் ஏதாவது கருத்துக்கள் உள்ளது என்றால், அதை முதல்வரிடம் தெரிவித்து தான் அரசு மூலம் செயல் படுத்த வேண்டுமே தவிர தன்னிச்சையாக செயல்ப டும் நிலை ஏற்பட்டால் அது ஆளுநருக்கு அளித்துள்ள அரசியல் சாசனத்திற்கு எதிரானது” என்று எச்சரித் தார்.

கரூர் விபத்து

தொடர்ந்து, கரூர் சம்பவத்தில் 41 பேர் இறந்ததற் கான காரணம் திமுக தான் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ள விமர்சனம் குறித்துச் செய்தியா ளர்கள் கேட்டனர். அதற்கு, “இதை நாங்கள் ஏற்கவில்லை. அந்த சம்பவத்தில் நெரிசல் ஏற்படுவதற்கு யார் கார ணமோ அவர்கள் தான் 41 பேர் இறப்பிற்கும் பொறுப்பு என அப்போதே கூறியுள்ளோம். இப்போதும் எங்கள் நிலைப்பாடு அது தான்” எனத் தெளிவுபடுத்தினார்.

குதிரை பேர அரசியல் அப்பட்டமான குற்றம்

தற்போதைய தவெக வினர் அதிமுக எம்எல்ஏக்களை குதிரை பேரம் நடத்தி கட்சி தாவ வைக்கின்றனர் என்றும், இந்தக் குதிரை பேரத்தில் முதல் குற்ற வாளியே முதல்வர் விஜய் தான் என்று டிடிவி தின கரன் கூறியுள்ள குற்றச்சாட்டு குறித்தும் செய்தியா ளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த பெ. சண்முகம், “தேர்தலில் வென்ற பிறகு எம்எல்ஏக்களை குதிரை பேரம் நடத்து வது போல செயல்படுவது என்பது யார் செய்தாலும் குற்றம் தான். ஆரம்பத்தில் நான்கு அதிமுக எம்எல்ஏக் களை பதவிகளை ராஜினாமா செய்து விட்டு தவெக வில் இணைத்த போதே இது சரி இல்லை என எங்கள் அதிருப்தியை தெரிவித்துள்ளோம். யார் இது போல் செய்தாலும் அது குற்றமே” என்று திட்டவட்ட மாகக் கூறினார்.

ஊழல் வழக்குகளிலிருந்து தப்பிக்கவே கட்சித் தாவல்

அதிமுக ஆட்சியின் போது கடும் லஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான முன்னாள் அமைச் சர்கள் மற்றும் எம்எல்ஏக்களை இப்போது தவெக-வில் சேர்த்துக் கொண்டு வருவது குறித்துச் செய்தியா ளர்கள் வினவினர். அதற்குப் பதிலளித்த அவர், “கடந்த காலங்களி லும் இது போல் மாறி மாறி கட்சிகளில் சேர்ப்பது என்பது நடந்துள்ளது. அது தவறுதான். பிரச்சனை என்னவென்றால், வழக்குகளில் உள்ளவர்களை தங்கள் கட்சியில் இணைத்துக் கொண்ட பிறகு அவர்களின் ஊழல் வழக்குகள் சரியாக விசாரிக்கப் படுமா என்பது கேள்விக்குறி தான். அவர்களை வழக்குகளில் இருந்து தப்பிப்பதற்கான நடவடிக்கை எடுக்கவே இதில் வாய்ப்புள்ளது” என்று பெ. சண்முகம் கூறினார்.