முந்தய பக்கம்

ஆளுநர் இல்லம் பெயர் மாற்றம்: முதலமைச்சர் விமர்சனம்

30 Nov 2025, 4:29 pm
ஆளுநர் இல்லம் பெயர் மாற்றம்: முதலமைச்சர் விமர்சனம்
<p><strong>ஆளுநர் இல்லம் பெயர் மாற்றம்: முதலமைச்சர் விமர்சனம்</strong></p> <p>சென்னை, நவ.30- தமிழ்நாடு ஆளுநர் இல்லத் தின் பெயர் &lsquo;ராஜ் பவன்&rsquo; என்பதிலிருந்து &lsquo;லோக் பவன்&rsquo; அதாவது &ldquo;மக்கள் பவன்&rdquo; என மாற்றப்படுவதாக ஒன்றிய உள் துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது. நாடு முழுவதும் உள்ள ஆளுநர் மாளிகைகளின் பெயர்களை மாற்ற 2024 ஆளுநர் மாநாட்டில் தமிழக ஆளு நர் ஆர்.என்.ரவி கோரிக்கை விடுத்திருந் தார். இந்த கோரிக்கையை ஏற்று &nbsp;ஒன்றிய அரசு இந்த முடிவை எடுத்து உள்ளது. யூனியன் பிரதேசங்களில் ஆளுநர் மாளிகை &ldquo;லோக் நிவாஸ்&rdquo; &nbsp;என அழைக்கப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. சிந்தனை மாற்றமே தேவை: முதலமைச்சர் மாநிலங்களில் உள்ள ராஜ் பவன் கள் இனி &lsquo;லோக் பவன்&rsquo; என்று அழைக்கப் படும் என ஒன்றிய அரசு அறிவித்து உள்ளதை எதிர்த்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதி விட்டுள்ளார். &ldquo;சட்டமன்றத்தை மதிக்கா தவர்கள் மக்கள் மாளிகை எனப் பெயர் மாற்றுவது கண் துடைப்பு என்றும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு களையும் இறையாண்மையுள்ள சட்ட மன்றத்தையும் மதிப்பதுதான் தற்போ தைய தேவை&rdquo; என்றும் அவர் தெரி வித்துள்ளார். &ldquo;சிந்தனையிலும் செயலி லும் மாற்றம் இல்லாவிட்டால் பெயர் மாற்றமும் தேவையற்றது&rdquo; என அவர் வலியுறுத்தியுள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram