தில்லியில் அமித் ஷாவுடன் ஆளுநர் அர்லேகர் சந்திப்பு
1 hour before
<p><strong>தில்லியில் அமித் ஷாவுடன் ஆளுநர் அர்லேகர் சந்திப்பு</strong></p><p>சென்னை, ஜூலை 2 - தமிழகத்தில் அரசியல் சூழல் பரபரப்பாக மாறியுள்ள நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தில்லியில் நேரில் சந்தித்துப் பேசினார். தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களுக்குப் பொறுப்பாக உள்ள ஆளுநர் அர்லேகர், இந்தச் சந்திப்பின்போது இரு மாநில அரசு நிர்வாகங்கள் தொடர்பான நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் தற்போதைய நிலவரங்கள் குறித்து விவாதித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்த பின்னர் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் பதவி விலகும் நிகழ்வுகள் அதிகரித்து, குதிரை பேரம் நடைபெறுவதாகப் புகார்கள் எழுந்துள்ள நிலையில், அது தொடர்பாகவும் இந்தச் சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. மேலும், தமிழகப் பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர் நியமனம் தொடர்பாக அரசு விரைவில் கொள்கை முடிவு எடுக்க உள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் இன்று தெரிவித்திருந்த நிலையில், பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில் இந்த விவகாரமும் இந்த ஆலோசனையில் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது. இதனுடன், சில சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான ஊழல் வழக்குகளில் விசாரணை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு, ஆளுநரிடம் அனுமதி கோரியிருந்த விவகாரம் மற்றும் மாநிலத்தின் பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு தொடர்பான விஷயங்கள் குறித்தும் இருவரும் கலந்தாலோசித்ததாகத் தெரிகிறது.</p>
