ஆளுந
12 Apr 2026, 5:30 am

மணலி விரைவு சாலையில் விபத்துகளை தடுக்க உயர்மட்ட சாலை திருவொற்றியூர் சிபிஎம் வேட்பாளர் சுந்தரராஜ் உறுதி

சென்னை, ஏப். 11- மணலி விரைவு சாலை யில் விபத்துகளை தடுக்க கண்டெய்னர்கள் செல்ல உயர்மட்ட சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று சிபிஎம் வேட்பாளர் சுந்தரராஜ் தெரிவித்தார். மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணி சார்பில் திருவொற்றியூர் தொகுதி யில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எல்.சுந்தர ராஜ் 12ஆவது வார்டு எர்ணீஸ்வரர் நகர் மசூதி அருகில் இருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். வணிகர்களிடம் வாக்கு சேகரிப்பு மாகாளியம்மன் கோயில் தெரு, பஜனை கோயில் தெரு, மேட்டுத் தெரு, திருவீதியம்மன் கோயில் தெரு, ஆதிதிரா விடர் நகர், கன்னிலால் லே அவுட், காந்தி நகர், பெரு மாள் கோயில் தெரு, கிரிஜா நகர், பிருந்தாவன் நகர், காமராஜ் நகர், பாலாஜி நகர், மகாலட்சுமி நகர், ஜெய்ஹிந்த் நகர், முரு கப்பா நகர், ராமநாதபுரம், ஜோதி நகர், மதுரா நகர், சண்முகபுரம், டி.கே.எஸ். நகர், வி.பி. நகர் ஆகிய பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று பொதுமக்களிடம், வணிகர்களிடம் வாக்கு சேகரித்தார். சென்ற இடங்களில் எல்லாம் பட்டாசு வெடித்து, கூட்டம் கூட்டமாக பெண் கள் வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்து, வெற்றி திலகமிட்டு, மாலை அணிவித்து, மலர் தூவி, சால்வை அணிவித்து மோர், குளிர்பானங்கள், இளநீர் வழங்கி சிறப்பான வரவேற்பளித்து, தங்கள் ஆதரவை தெரிவித்தனர். வளர்ச்சித் திட்டங்கள் அப்போது எல்.சுந்தர ராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், 4ஆவது வார்டுக்குட்பட்ட எர்ணாவூ ரில் 9 கோடி ரூபாய் மதிப் பீட்டில் ஆரம்பப் பள்ளி, உயர் நிலைப் பள்ளியில் புதிய வகுப்பறைகள் கட்ட ப்பட்டு வருகின்றன. ராம நாதபுரத்தில் உள்ள பள்ளிக்கு 2.5 கோடி ருபாய் மதிப்பீட்டில் 12 வகுப்பறை கள் கட்டப்பட்டுள்ளன. 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சமூக நலக்கூடம் கட்டப்பட் டுள்ளது. 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆரம்ப சுகா தார நிலையம் கட்டப்பட் டுள்ளது. 29 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. நல்லாட்சி தொடர வாக்களிப்பீர் 20 லட்ச ரூபாய் மதிப் பீட்டில் விளையாட்டு மைதா னத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. 200 சாலைகளில் 160 சாலைகள் தார் சாலைகளாக அமைக் கப்பட்டுள்ளன. இப்படி ஏராளமான திட்டப்பணிகள் கடந்த திமுக ஆட்சியில் நடைபெற்றுள்ளன. ஆனால் தற்போது போட்டி யிடும் அதிமுக வேட்பாளர் குப்பன் 10 ஆண்டுகள் சட்ட மன்ற உறுப்பினராக இருந்தும் எந்த திட்டத்தை யும் மேற்கொள்ளவில்லை. மீண்டும் விட்ட பணிகள் தொடர வேண்டும் என்றால் திமுக ஆட்சி தொடர வேண்டும். எனவே இந்த பகுதி மக்கள் எனக்கு அரி வாள், சுத்தியல், நட்சத்திரம் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதில் தேர்தல் பணிக் குழு தலைவர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர், கிழக்கு பகுதி செயலாளர், மண்டலக்குழு தலைவர் தி.மு.தனியரசு, மேற்கு பகுதிச் செயலாளர் வை.ம. அருள்தாசன், வட்டச் செயலாளர் ராம்குமார், மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன், சிபிஎம் மூத்த தலைவர் பா.செல்வசிங், மாவட்டச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், தொகுதி பொறுப்பாளர் டி.கே.சண் முகம், பி.வி.முருகன் காங்கி ரஸ்), விசிக மாவட்டச் செயலாளர் அலெக்சாண் டர், நிர்வாகிகள் புருஷோத் தமன், கார்க்கி தேமுதிக பகுதிச் செயலாளர் பவுல் ராஜ் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கே.ஜாபர் உசேன், என்.இப்ராகிம் காஜா, நசீர் அக மத், கவுஸ், எல்.ஜாபர் சாதிக், எஸ்.டி.மோகன், சிபிஎம் பகுதிச் செயலாளர் கள் எஸ்.கதிர்வேல், ஆர்.கருணாநிதி, வட்ட பொறுப் பாளர்கள் கே.வெங்க டையா, அலமேலு, ராமன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.