தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தேனியில் அரசு போக்குவரத்து ஓய்வுபெற்ற ஊழியர் நல அமைப்பு தகவல் பலகை திறப்பு

26 Dec 2025, 4:32 pm
தேனியில் அரசு போக்குவரத்து ஓய்வுபெற்ற   ஊழியர் நல அமைப்பு தகவல் பலகை திறப்பு
<p><strong>தேனியில் அரசு போக்குவரத்து ஓய்வுபெற்ற &nbsp; ஊழியர் நல அமைப்பு தகவல் பலகை திறப்பு</strong></p> <p>தேனி ,டிச.26- தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்ற ஊழியர் நல அமைப்பு சார்பாக தகவல் பலகை திறப்பு நிகழ்ச்சி தேனி போக்குவரத்து &nbsp;பணிமனை முன்பு நடைபெற்றது . தேனி பழனிசெட்டிபட்டி அரசு போக்கு வரத்து பணிமனை முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ரேவா அமைப்பின் திண்டுக்கல் மண்டல தலைவர் சி.பாலசந்தர் &nbsp;தலைமை வகித்தார்.பாஸ்கரன் வரவேற்றார். &nbsp;தகவல் பலகையை திறந்து வைத்து , சம்மேளன துணைத் தலைவர் வி.பிச்சை சிறப்புரையாற்றினார் .மதுரை கோட்ட பொதுச் செயலாளர் ஆர்.வாசுதேவன் ,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எம்.இராமச்சந்திரன் ,மூத்த தலைவர் கே.ராஜப்பன் ,சிஐடியு முன்னாள் மாவட்டச் செயலாளர் சி.முருகன், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஜி.சண்முகம் ,திண்டுக்கல் மண்டல &nbsp;ரேவா சங்க பொதுச் செயலாளர் ஆர். பால்ராஜ் ,சிஐடியு திண்டுக்கல் மண்டல பொதுச் செயலாளர் என்.ராமநாதன், தலைவர் ஐ.ஜெயக்குமார் &nbsp;ஆகியோர் வாழ்த்திப் பேசினர் . இந்நிகழ்ச்சியில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.வெங்கடேசன் ,தேனி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜி.ராஜேந்திரன் ,சிஐடியு அரசு போக்கு வரத்துக் கழக துணை பொதுச் செயலா ளர்கள் மணிகண்டன் ,ஜி.கணேஷ்ராம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.