அரசு போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
23 Nov 2025, 6:20 pm
<p><strong>அரசு போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>திருப்பூர், நவ.23- ஆக்கிரமிப்புகள் அகற்றுவதில் பாரபட்சம் காட்டுவதைக் கண்டித்து அரசு போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூரில் நெடுஞ்சாலைத்துறையின் ஆக்கிரமிப்புகள் அகற்றுவதில் பாரபட்சம் காட்டப்படுவதை கண்டித்தும், ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள தொழிலாளர் விரோத 4 சட்டத் தொகுப்புகளை திரும்பப்பெற வேண்டும். வணிக நோக்கமில்லா தொழிற்சங்க அலுவலகங்கள் சூறையாடப்பட்டதை கண்டித்தும் அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் சனியன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் - காங்கேயம் சாலையிலுள்ள மண்டல அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் மண்டல துணை பொதுச்செயலாளர் தேவநேசன் தலைமை வகித்தார். மண்டலத் தலைவர் பி.செல்லத்துரை, மண்டல பொதுச்செயலாளர் கேகொங்கு ராஜ், சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் கே.உன்னிகிருஷ்ணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு மாநகரச் செயலாளர் ஜெயபால் வாழ்த்திப் பேசினார். முடிவில், மண்டலப் பொருளாளர் மனோகர் நன்றி கூறினார்.</p>
