பிப்.12 வேலை நிறுத்தத்தில் முழுமையாக பங்கேற்பு அரசு போக்குவரத்து ஊழியர்கள் அறிவிப்பு
5 Feb 2026, 3:40 pm
<p><strong>பிப்.12 வேலை நிறுத்தத்தில் முழுமையாக பங்கேற்பு அரசு போக்குவரத்து ஊழியர்கள் அறிவிப்பு</strong></p>
<p>தருமபுரி, பிப்.5- பிப்.12 ஆம் தேதி நடைபெறவுள்ள அகில இந்திய பொது வேலை நிறுத் தத்தில் போக்குவரத்து கழக ஊழியர் கள் முழுமையாக பங்கேற்க முடிவு செய்துள்ளனர். பிப்.12 அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தை விளக்கி, சிஐடியு போக்கு வரத்துக்கழக ஊழியர் சங்கத்தின் சார் பில், சிஐடியு தருமபுரி அலுவலகத்தில் சிறப்புப் பேரவை கூட்டம் வியாழனன்று நடைபெற்றது. சங்கத்தின் மண்டலத் தலைவர் எஸ்.சண்முகம் தலைமை வகித்தார். சம்மேளன துணை பொதுச் செயலாளர் வி.தயானந்தம் சிறப்புரை யாற்றினார். மண்டல பொதுச்செயலா ளர் சி.ரகுபதி, துணைத்தலைவர் சி. முரளி, பொருளாளர் என்.மயில்சாமி, மாவட்ட நிர்வாகிகள் முத்துலிங்கம், வெங்கடாசலபதி ஆகியோர் பேசினர். இக்கூட்டத்தில், 8 மணிநேர வேலையை 12 மணிநேரமாக மாற்றும் நடவடிக் கையை கைவிட வேண்டும். தொழிலா ளர்களுக்கு எதிரான 4 சட்டத்தொகுப்பு களை திரும்ப பெற வேண்டும். மோட்டார் வாகனச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும். பொதுத்துறை நிறுவ னங்களை தனியாருக்கு விற்கும் நட வடிக்கையை கைவிட வேண்டும் உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி பிப்.12 ஆம் தேதி அகில இந்திய அளவில் வேலை நிறுத்தம் நடைபெற வுள்ளது. இப்போராட்டத்தில், போக்கு வரத்து கழகத்தில் உள்ள அனைத்து ஊழியர்களும் பங்கேற்று வெற்றிபெற செய்வது என முடிவு செய்யப்பட்டது.</p>
