முந்தய பக்கம்

அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் பணப்பலன்: ரூ. 860 கோடி ஒதுக்கீடு!

25 Nov 2025, 3:29 pm
அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் பணப்பலன்: ரூ. 860 கோடி ஒதுக்கீடு!
<p><strong>அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் பணப்பலன்: ரூ. 860 கோடி ஒதுக்கீடு!</strong></p> <p>சென்னை, நவ. 25 - அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணி யாற்றி ஓய்வுபெற்றவர்களுக்கு பணப்பலன் வழங்க 860 கோடி ரூபாய் ஓதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தங்களின் பணப்பலன் உள்ளிட்ட கோரிக்கை களுக்காக, அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் சிஐடியு தலை மையில் 62 நாட்களாக காத்திருப்பு போராட்டம் &nbsp;நடத்தினர். பழைய ஓய்வூதியத் திட்டம், 17 &nbsp;மாத ஓய்வு கால பலன்கள், ஒப்பந்த நிலுவைத் &nbsp;தொகை வழங்குதல் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் நடைபெற்று வந்தது. பின்னர், போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அளித்த உறுதிமொழியை ஏற்று, போராட்டத்தை விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்நிலையிலேயே, 2024 மே முதல் ஜூலை &nbsp;வரை ஓய்வு மற்றும் விருப்ப ஓய்வு பெற்ற வர்களுக்கும், பணிக்காலத்தில் மரணமடைந்த வர்களுக்கும் பணப்பலன் வழங்க ரூ. 860 கோடி &nbsp;நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram