நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு துணை நிற்கிறது
9 Dec 2025, 4:25 pm
<p><strong>நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு துணை நிற்கிறது</strong></p>
<p>கண்ணூர் பிரபல மலையாள நடிகை ஒருவர் கடந்த 2017ஆம் ஆண்டு காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கிலிருந்து மலையாள நடிகர் திலீப் எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிமன்றம் மூலம் விடுதலை செய்யப் பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கண்ணூரில் நடைபெற்ற செய்தியா ளர்கள் சந்திப்பின் போது,”நடிகை பாலியல் வல்லுறவு வழக்கில் ஆரம் பத்திலிருந்தே அரசாங்கம் பாதிக்கப் பட்ட பெண்ணுக்கு ஆதரவாக நின்றது. இந்த நிலைப்பாடு தொடரும். இந்த வழக்கில் அரசு மேல்முறையீடு செய்யப் போவதை குற்றம் சாட்டிய ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎப்) ஒருங்கிணைப்பாளர் அடூர் பிரகாஷ் மன்னிப்புக் கேட்க வேண்டும். விசாரணை நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து அரசு சட்டப்பூர்வ ஆலோ சனை நடத்தும். அரசுக்கு வேறு வேலை இல்லாமல் இதை செய்ய வில்லை.யுடிஎப் ஒருங்கிணைப்பாளர் இதுகுறித்து ஒரு விசித்திரமான வாதத்தை முன்வைத்தார். நான் எவ்வளவு யோசித்தாலும், ஏன் இவ் வளவு வலுவான பதில் வந்தது? என்பது எனக்கு இன்னும் புரியவில்லை. ஒன்றை சந்தேகத்திற்கு இடமின்றி சொல்லலாம். இந்த வழக்கில் காவல் துறை சதித்திட்டம் தீட்டியதாக நடிகர் திலீப்பின் குற்றச்சாட்டில் உண்மை இல்லை. பெறப்பட்ட ஆதாரங்க ளின் அடிப்படையில் காவல்துறை நட வடிக்கை எடுத்தது. காவல்துறைக்கு எதிராக திலீப் எந்த ஒரு புகார் மனு வையும் வழங்கவில்லை. திலீப் என்ன சொல்கிறார் என்பதை அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும். இந்த வழக்கை அரசு தரப்பு சிறப் பாக கையாண்டது என்பதே பொது வான ஒருமித்த கருத்து. வழக்கின் ஒவ்வொரு கட்டத்திலும் பொதுமக்க ளும் சட்ட வல்லுநர்களும் நேர்மறை யான கருத்துக்களைத் தெரிவித்துள்ள னர். இதுபோன்ற விஷயங்களில் தெளிவான நிலைப்பாட்டை எடுக்க அர சாங்கம் தயாராக உள்ளது. இதையே அந்த வழக்கிலும் மேற்கொண்டது” என அவர் கூறினார்.</p>
