தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கார் பார்க்கிங்கிற்காக அரசு சித்த மருத்துவமனை அகற்றம்: மாவட்ட ஆட்சியர் உறுதி என்ன ஆச்சு?

21 Nov 2025, 5:11 pm
கார் பார்க்கிங்கிற்காக அரசு சித்த மருத்துவமனை அகற்றம்: மாவட்ட ஆட்சியர் உறுதி என்ன ஆச்சு?
<p><strong>கார் பார்க்கிங்கிற்காக அரசு சித்த மருத்துவமனை அகற்றம்: மாவட்ட ஆட்சியர் உறுதி என்ன ஆச்சு?</strong></p> <p>திருப்பூர், நவ.21- திருப்பூர் மாநகராட்சியின் புதிய அலுவ லக கட்டுமானப் பணிகளுக்காக, கலைஞர் &nbsp;பேருந்து நிலையம் எதிரில் பணிகள் நடை பெற்று வருகின்றன. இந்த இடத்திற்கு அரு கில் இருக்கக்கூடிய சித்த மருத்துவமனை முழுமையாகப் பாதுகாக்கப்படும் என முன் னாள் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் உறுதியளித்திருந்த நிலையில், தற்போது கார் பார்க்கிங்கிற்காக அரசு சித்த மருத்துவம னையை அகற்ற நோட்டீஸ் வழங்கப்பட்டுள் ளது வேதனை அளிப்பதாக மருத்துவப் பய னர்கள் தெரிவிக்கின்றனர். திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே, 1989ஆம் ஆண்டு முதல் அரசு மருத்து வமனையுடன் இணைந்த சித்த மருத்துவப் பிரிவு செயல்பட்டு வருகிறது. தினமும் 500 &nbsp;க்கும் மேற்பட்ட நோயாளிகள் இங்கு சிகிச்சை &nbsp;பெறுகின்றனர். குறிப்பாக, புதன்கிழமைக ளில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட வர்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர். &nbsp;நகரின் மையத்திலும், பேருந்து நிலை யத்திற்கு அருகிலும் அமைந்துள்ள இந்த &nbsp;மருத்துவமனை, வடக்கு, தெற்கு போன்ற அனைத்து பகுதிகளில் இருந்தும் நோயாளி கள் வருவதற்கு வசதியாக உள்ளது. இந்நிலையில், திருப்பூர் மாநகராட்சி, புதிய அலுவலகக் கட்டிடத்திற்காக, பேருந்து &nbsp;நிலையம் எதிரே உள்ள சுமார் 5 ஏக்கர் நிலத்தை சில மாதங்களுக்கு முன்பு கையகப் படுத்தியது. இதையடுத்து, பல ஆண்டுக ளாக பயன்பாட்டில் இருந்த அலோபதி சிகிச்சை மையங்கள், திருப்பூர் அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனைக்கு இடம் மாற் றப்பட்டன. அந்தக் கட்டிடங்கள் இடிக்கப் பட்ட பின்னர், மாநகராட்சிப் பணிகள் துவங் கப்பட்டுள்ளன. இதற்கிடையே, கடந்த நவம்பர் 3 ஆம் &nbsp;தேதி, திருப்பூர் மாநகராட்சியின் சார்பில், சித்த மருத்துவமனை, கோவை, திருப்பூர் மாவட்ட சித்த மருத்துவ அலுவலகம், உள் நோயாளிகள் பிரிவு, ஓமியோபதி மற்றும் ஆயுர்வேத பிரிவுகளை காலி செய்யக் கோரி &nbsp;நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே &nbsp;மாநகராட்சிக் கட்டிடம் கட்டுவது தொடர்பான &nbsp;கூட்டத்தின்போது, அப்போதைய மாவட்ட &nbsp;ஆட்சியர் த.கிறிஸ்துராஜ், சித்த மருத்துவ மனை முழுமையாகப் பாதுகாக்கப்படும், 60க்கும் மேற்பட்ட அரிய வகை மூலிகைக ளைக் கொண்ட வனத்திற்கும் எவ்வித பாதிப் பும் ஏற்படாது என உறுதியளித்திருந்தார். ஆனால், அந்த உறுதிமொழிக்கு மாறாக, இப் போது காலி செய்ய நோட்டீஸ் வழங்கப்பட் டுள்ளது. இது தொடர்பாக பேசிய நோயாளிகள் சிலர், கடந்த 35 ஆண்டுகளாக இயங்கி வரும் &nbsp;இந்த மருத்துவமனைக்குப் பதிலாக, இப் போது கார் பார்க்கிங் கட்டத் திட்டமிடப்பட் டுள்ளது. சுமார் 1 ஏக்கர் பரப்பளவில் இயங் கும் இந்த மருத்துவமனை மூன்று தலை முறைகளாகப் பயன்பாட்டில் உள்ளது. நக ரின் மையப்பகுதியில் இருப்பதால், நோயா ளிகள் வருவதற்கு மிகவும் வசதியாக உள் ளது. அரிய மூலிகைகள் கொண்ட வனத்தை &nbsp;எப்படி வேறிடத்திற்கு மாற்ற முடியும்? மருத்து வமனை வளாகத்தைத் தொந்தரவு செய்யா மல், மீதமுள்ள 4 ஏக்கர் நிலத்தைப் பயன்ப டுத்திக் கொள்ளலாம். நமது மாவட்டத்தில் இரு அமைச்சர்கள் உள்ளனர். பொதுமக்க ளின் நலனைக் கருத்தில் கொண்டு, மருத்து வமனையைப் பாதுகாக்க அவர்கள் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என கூறினர். மாநகராட்சி தரப்பில் கூறுகையில், தற் போது வரைபடப் பணிகள் நிறைவடைந்துள் ளன. மருத்துவமனை கட்டிடம் இருந்த இடத் தில் கார் பார்க்கிங் வருவதால், மருத்துவ மனையை வேறிடத்திற்கு மாற்ற நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஓமியோபதி கட்டிடம் இடிக்கப்பட்டு, பணிகள் தொடங்கப்படும். அடுத்த கட்டமாக சித்த மருத்துவமனை கட்டிடம் எடுக்கப்படும். இது தொடர்பான எந்தவொரு ஆட்சேபனைகள் குறித்தும், இறுதி முடிவை மாவட்ட ஆட்சியர் மட்டுமே &nbsp;எடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.