முந்தய பக்கம்

ஊரக திறனாய்வு தேர்வில் வெற்றி அரசுப்பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

6 Mar 2026, 3:17 pm
ஊரக திறனாய்வு தேர்வில் வெற்றி அரசுப்பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு
<p><strong>ஊரக திறனாய்வு தேர்வில் வெற்றி அரசுப்பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு</strong></p> <p>தருமபுரி, மார்ச் 6- ஊரக திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற ஏரியூர் அருகே உள்ள அரசுப்பள்ளியில் படித்து வரும் மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் கிராமப்புற மாணவர்களை ஊக்குவிப்ப தற்காக ஊரக திறனாய்வு தேர்வு திட்டத்தின் கீழ், கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி பள்ளி களில் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இந்த திறனாய்வு &nbsp;தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். அதில், அதிக மதிப் பெண்கள் அடிப்படையில் தகுதியான மாணவ, மாணவிக ளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந் தாண்டுக்கான தேர்வு கடந்தாண்டு டிச.6 ஆம் தேதி நடை பெற்றது. இந்நிலையில், தேர்வு முடிவுகள் வெளியிடப் பட்டு, ஊக்கத்தொகை பெற தகுதியானவர்கள் பட்டியல் &nbsp;புதனன்று வெளியிடப்பட்டது. அதில் தருமபுரி மாவட்டம், ஏரியூர் ஒன்றியம், ராமகொண்டஅள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் 2 மாணவிகள் தேர்வு பெற்றனர். இத் தேர்வில் வெற்றி பெற்ற தரணி ஸ்ரீ, அக்ஷாயா ஆகிய இரண்டு மாணவிகளையும் பள்ளியின் தலைமை ஆசிரியர் ரவிச்சந்தி ரன், நல்லாசிரியர் சுப்பிரமணி மற்றும் ஆசிரியர்கள் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram