வானொலி நிகழ்ச்சியில் பங்கேற்ற அரசுப் பள்ளி மாணவர்கள்
6 Dec 2025, 6:20 pm
<p><strong>வானொலி நிகழ்ச்சியில் பங்கேற்ற அரசுப் பள்ளி மாணவர்கள்</strong></p>
<p>தஞ்சாவூர், டிச.6 - தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே செருவாவிடுதி உடையார் தெரு அரசு தொடக்கப் பள்ளியில் படித்து வரும் 15 மாணவ, மாணவிகள் திருச்சி வானொலி நிலைய நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இப்பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) செ.இராமநாதன், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் இளஞ்சியம், பள்ளி மேலாண்மைக் குழு துணை தலைவர் ரஷ்யா, பள்ளி மேலாண்மை குழு ஆசிரியை சாருமதி ஆகி யோருடன் மாணவர்கள் வேன் மூலம் புறப் பட்டு திருச்சி வானொலி நிலையத்திற்குச் சென்றனர். திருச்சி வானொலி நிலையத்திற்கு சென்ற மாணவர்கள் பாட்டு பாடுதல், பெண் கல்வி குறித்த விழிப்புணர்வு நாடகம், தலைவர்கள் பற்றிய உரை, நீதிநெறி கதைகள், பழ மொழி சொல்லுதல், உள்ளிட்ட தனித்திறன் களை வெளிப்படுத்தினர். மாணவ-மாணவி கள் வானொலி நிகழ்ச்சியில் பங்கேற்றதால் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பதிவு செய்யப்பட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் டிச.27 அன்று வானொலியில் ஒலிபரப்பு செய்யப்பட உள்ளன.</p>
