தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கண் அயர்ந்தால் எச்சரிக்கை; தானாக நிற்கும் சென்சார் கண்ணாடி அரசுப் பள்ளி மாணவிகள் கண்டுபிடித்து அசத்தல்

10 Feb 2026, 4:50 pm
கண் அயர்ந்தால் எச்சரிக்கை; தானாக நிற்கும் சென்சார் கண்ணாடி அரசுப் பள்ளி மாணவிகள் கண்டுபிடித்து அசத்தல்
<p><strong>கண் அயர்ந்தால் எச்சரிக்கை; தானாக நிற்கும் சென்சார் கண்ணாடி அரசுப் பள்ளி மாணவிகள் கண்டுபிடித்து அசத்தல்</strong></p> <p>ஒட்டன்சத்திரம், பிப்.10- வாகனத்தை ஓட்டும் போது கண் அயர்ந்தால் முன் எச்சரிக்கை அளித்து, வாக னத்தை தானாக நிறுத்தும் சென்சார் கண்ணாடி யை அரசு பள்ளி மாணவிகள் கண்டுபிடித்து அசத்தியுள்ளனர். பேருந்து, லாரி, கார், வேன், இருசக்கர வாக னங்களை அதிகாலை நேரங்களில் தொடர்ந்து இயக்கும் போது ஓட்டுநர்களுக்கு தூக்கம் ஏற்பட்டு &nbsp;கண் அசந்த சில நொடிகளில் பெரும் விபத்து கள் நேர்ந்து உயிர் சேதங்கள் ஏற்படுவது அதி கரித்து வருகிறது. தொடர்ந்து வாகனங்களை இயக்குவதால் ஏற்படும் அசதியே இதற்குக் காரணமாக உள்ளது. அவசர தேவையால் தூங்காமல் வாகனங்களை ஓட்டுவதால் விபத்துகள் அதிகம் நிகழ்கின்றன. இந்நிலையில், அரசுப் பள்ளி மாணவி கள் வடிவமைத்துள்ள இந்த சென்சார் கண்ணாடி யை அணிந்து வாகனம் ஓட்டும் போது, ஓட்டு நருக்கு கண் மூடப்பட்டால் உடனடியாக அலாரம் ஒலித்து முன் எச்சரிக்கை அளிப்பதுடன், வாக னத்தை அதே இடத்தில் ஒரே நொடியில் தானாக &nbsp;நிறுத்தும் வகையில் இந்த நவீன கருவி செயல்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே &nbsp;உள்ள கோ.ராமநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவிகள் மித்ரா, ரூபிணி ஆகியோர் ஆசிரியர்களின் வழி காட்டுதலுடன் இந்த சென்சார் கண்ணாடியை உருவாக்கியுள்ளனர். மாவட்ட அளவில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் இக்கருவியை செயல்முறை விளக்கத்துடன் காட்சிப்படுத்திய மாணவிகள், திண்டுக்கல் மாவட்ட மற்றும் கல்வித் துறை அதிகாரிகளிடமிருந்து பல்வேறு பரிசுகள் மற்றும் பாராட்டுகளைப் பெற்றுள்ளனர். இதுகுறித்து மாணவிகள் கூறுகையில், &ldquo;இந்த சென்சார் கண்ணாடியை தயாரிக்க ரூ.500 வரை மட்டுமே செலவானது. சக்தி வாய்ந்த சென்சார் கருவியை தரமான கண்ணாடி யில் பொருத்தி, வாகனங்களின் பேட்டரியுடன் &nbsp;இணைத்து தயாரித்தால் இது மேலும் பய னுள்ளதாக இருக்கும். தனியார் நிறுவனங்கள் இதனை தயாரிக்க முன்வந்தால், எங்களுடைய அனைத்து தொழில்நுட்ப யோசனைகளையும் வழங்க தயாராக உள்ளோம். அரசு தேவை யான உதவிகளை வழங்கினால், தூக்கத்தால் ஏற்படும் விபத்துகளை முற்றிலும் தவிர்க்க முடி யும்&rdquo; என்றனர். முதுநிலை விலங்கியல் ஆசிரியர் சரவ ணன், பட்டதாரி ஆசிரியர் சோலை உள்ளிட்ட &nbsp;ஆசிரியர்கள் மாணவிகளை ஊக்குவித்ததாக வும் தெரிவித்தனர். கிராமப்பகுதியில் பயிலும் அரசு பள்ளி &nbsp;மாணவிகள் உருவாக்கிய இந்த கண்டுபிடிப்பை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.