தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அரசுப் பள்ளிக்கு பூட்டு: வட்டார வளர்ச்சி அலுவலர் ஜீப் சிறைபிடிப்பு

3 hours before
அரசுப் பள்ளிக்கு பூட்டு: வட்டார வளர்ச்சி அலுவலர் ஜீப் சிறைபிடிப்பு
<p><strong>அரசுப் பள்ளிக்கு பூட்டு: வட்டார வளர்ச்சி அலுவலர் ஜீப் சிறைபிடிப்பு</strong></p><p>கிருஷ்ணகிரி, ஜூலை 13- கெலமங்கலம் அருகே கெட்டூர் கிராமத்தில் தற்காலிகமாகக் கட்ட டத்தில் இயங்கி வந்த அரசு தொடக்கப்பள்ளிக்கு அதன் உரிமையாளர் பூட்டு போட்டதால், வட்டார வளர்ச்சி அலுவ லரின் ஜீப்பைச் சிறை பிடித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கெட்டூர் கிராமத்தைச் சேர்ந்த 23 மாணவர்கள், 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பொம்மதாத்தனூர் பள்ளிக்குச் செல்ல சிரமப் பட்டதால், நாராயணப்பா என்பவரது கட்டடத்தில் தற்காலிகமாகப் பள்ளி இயங்கி வந்தது. இந்நிலை யில், தனது மகனின் திரு மணத்திற்காகக் கட்ட டத்தைக் காலி செய்யு மாறு நாராயணப்பா வலி யுறுத்தியும், அரசு மாற்று ஏற்பாடு செய்யாத தால் அவர் பள்ளிக்கு நேற்று பூட்டு போட்டார். திங்க ளன்று காலை பள்ளிக்கு வந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பூட்டப்பட்டி ருப்பதைக் கண்டு அதிர்ச்சி யடைந்தனர். இதனையடுத்து அங்கு வந்த கெலமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷின் ஜீப்பை, மாண வர்களும் பெற்றோர்களும் சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். தகவலறிந்து வந்த ஓசூர் கல்வி மாவட்ட அலுவலர் நரசிம்மன், கெலமங்கலம் வட்டார கல்வி அலுவலர்கள் லோகேஷ், பயாஸ் மற்றும் தேன்கனிக்கோட்டை வட்டாட்சியர் வேலு, மண்டல துணை வட்டாட்சி யர் செல்வராஜ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். புதிய கட்டடம் கட்டும் வரை தற்போதைய கட்ட டத்திலேயே பள்ளி செயல்பட அனுமதிக்குமாறு நாராயணப்பாவிடம் கோரியதை அவர் ஏற்றுக் கொண்டார். பின்னர் பள்ளி திறக்கப்பட்டு மாண வர்கள் உள்ளே அனு மதிக்கப்பட்டனர். அதிகாரிகளின் அலட்சி யத்தாலேயே இத்தகைய சூழல் ஏற்பட்டதாகக் குற்றம் சாட்டிய பொதுமக்கள், கெட்டூரில் அரசு தொடக்கப்பள்ளிக்கு விரைவில் புதிய கட்டடம் கட்டித்தர மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.