முந்தய பக்கம்

ரூ.210 கோடியில் அரசுப் பள்ளி, நூலகக் கட்டடங்கள் திறப்பு

22 Dec 2025, 2:53 pm
ரூ.210 கோடியில் அரசுப் பள்ளி, நூலகக் கட்டடங்கள் திறப்பு
<p><strong>ரூ.210 கோடியில் அரசுப் பள்ளி, நூலகக் கட்டடங்கள் திறப்பு</strong></p> <p>சென்னை, டிச.22 - &nbsp;தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிசம்பர் 22 ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் 20 மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள பல்வேறு கல்வி உள்கட்டமைப்பு வசதிகளை திறந்து வைத்தார். அதன்படி, 60 அரசுப் பள்ளிகளில் 96.49 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட 392 புதிய வகுப்பறைகள், 4 ஆய்வகங்கள், 16 கழிப்பறைக் கட்டடங்கள், 8 குடிநீர் வசதிப் பணிகள், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் 113.68 கோடி ரூபாயில் கட்டப்பட்ட 2 மாவட்ட அரசு மாதிரிப் பள்ளிக் கட்டடங்கள் மற்றும் விடுதிக் கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டன. மேலும் பொது நூலக இயக்ககத்தின் சார்பில் 20 மாவட்டங்களில் 17.82 கோடி ரூபாயில் கட்டப்பட்ட 68 நூலகக் கட்டடங்கள் மற்றும் கடலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் 1.90 கோடி ரூபாயில் கட்டப்பட்ட 3 கிளை நூலகக் கட்டடங்களும் திறந்து வைக்கப்பட்டன. மொத்தம் 229.89 கோடி ரூபாயில் கட்டப்பட்ட இந்தக் கட்டடங்கள் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில் அமைந்துள்ளன. மயிலாடுதுறை மாவட்ட மைய நூலகத்திற்கு 4.40 கோடி ரூபாயில் புதிய கட்டடம் கட்ட முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எ.வ. வேலு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram