தேங்காய் உள்ளிட்ட பொருட்களை அரசே கொள்முதல் செய்திடு!
yesterday

தேங்காய் உள்ளிட்ட பொருட்களை அரசே கொள்முதல் செய்திடு!

தென்னை விவசாயிகள் சங்கத்தினர் முழக்கம்

தருமபுரி, ஜூன் 22- தேங்காய், தேங்காய் எண் ணெய் உள்ளிட்ட பொருட்களை அரசே கொள்முதல் செய்ய வேண் டும் என வலியுறுத்தி தென்னை விவ சாயிகள் சங்கத்தினர் திங்களன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேங்காய் ஒரு கிலோவுக்கு 60 ரூபாய், உரிக்காத தேங்காய் கிலோ ஒன்றுக்கு 30 ரூபாய், கொப்பரை கிலோ ஒன்றுக்கு 180 ரூபாய் என விலை நிர்ணயம் செய்ய வேண்டும். தென்னையை தாக்கும் வெள்ளை ஈ, வாடல் நோய், வேர்ப்புழு, கரு வண்டு புழு, ஊசி புழு ஆகிய பூச்சிகளின் தாக்குதலை கட்டுப் படுத்த அரசு உதவி செய்ய வேண் டும். நோய்களை கட்டுப்படுத்த அரசு வேளாண்மை விஞ்ஞானி களின் மூலம் தகுந்த மருந்து கண்டுபிடிக்க, தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். தேங் காய், தேங்காய் எண்ணெயை அரசே கொள்முதல் செய்து, நியாய விலைக்கடைகளின் மூலம் மக்க ளுக்கு வழங்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி மாநிலம் முழுவதும் தமிழ் நாடு தென்னை விவசாயிகள் சங் கத்தினர் திங்களன்று ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். தருமபுரி ஆட்சியர் அலுவல கம் அருகே நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு, சங்கத்தின் மாவட் டத் தலைவர் கே.எல்லப்பன் தலைமை வகித்தார். விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் சோ. அருச்சுனன், மாவட்டப் பொருளா ளர் சி.வஞ்சி, நிர்வாகிகள் என்.கந்த சாமி, ஆர்.சின்னசாமி, ஜி.நக்கீரன், விவசாயிகள் சங்க மாவட்டச் செய லாளர் பி.பொன்னுசாமி, பொருளா ளர் பி.பி.ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர். இதன்பின் மாவட்ட ஆட்சியர் வே.சரவணனை சந்தித்து, கோரிக்கை மனு அளித்த னர்.

கோவை

கோவை மாவட்டம், பொள் ளாச்சி காந்தி சிலை அருகே நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத் தின் மாவட்டச் செயலாளர் ஸ்டா லின் பழனிச்சாமி தலைமை வகித் தார். விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் வி.ஆர்.பழனிச்சாமி, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டப் பொருளாளர் கே.மகா லிங்கம், சிஐடியு தாலுகா ஒருங் கிணைப்பாளர் சரவணன், விவ சாயிகள் சங்க தாலுகா நிர்வாகி கார்த்திகேயன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தென்னை விவசாயி கள் சங்க மாவட்டப் பொருளாளர் ஜெ.ரவீந்திரன் நிறைவுரையாற்றி னார். கார்த்திகேயன் நன்றி கூறி னார்.

திருப்பூர்

திருப்பூர் மாவட்டம், உடுமலை நகராட்சி அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள், தேங்காய் களை சாலையில் உடைத்து கோரிக்கை முழக்கங்களை எழுப்பி னர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தென்னை விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் லெனின் குமார் தலைமை வகித்தார். மாநிலச் செய லாளர் துளசி நாராயணன், மாவட் டச் செயலாளர் பரமசிவம் ஆகி யோர் கோரிக்கைகளை வலியு றுத்தி பேசினர். இதில் சங்கத்தின் துணைத்தலைவர் தயானந்தன், பொருளாளர் திருமலைசாமி, துணைச்செயலாளர் மோகன்ராஜ், தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர் வாகிகள் பாலதண்டபாணி, ஜெய பிரகாஷ், வீரப்பன், விஜயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.