ஆணவக் கொலைகளை தடுக்க தனிச் சட்டம் 3 மாதத்தில் பரிந்துரை அளிக்க அரசாணை!
13 Nov 2025, 3:30 pm
<p><strong>ஆணவக் கொலைகளை தடுக்க தனிச் சட்டம் 3 மாதத்தில் பரிந்துரை அளிக்க அரசாணை!</strong></p>
<p>சென்னை, நவ.13- கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது, சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிபிஐ, விசிக உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இந்தக் கோரிக்கைகளுக்குப் பதிலளித்து, பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “ஆணவக் கொலைகளை தடுக்கும் நோக்கில் புதிய சட்டத்தை இயற்ற உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணையம் அமைக்கப்படும்” என்று சட்டப்பேரவையில் அறிவித்தார். இந்நிலையில், அதற்கான முறைப்படியான அரசாணை தற்போது பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த அரசாணையில், உயர்நீதிமன்ற நீதிபதி கே.என். பாஷா தலைமையிலான ஆணையம், சட்ட வல்லுநர்கள், முற்போக்காளர்கள் மற்றும் மானுடவியல் அறிஞர்களைக் கொண்டு செயல்படும். இந்தக் குழு மூன்று மாதங்களுக்குள் பரிந்துரைகளை வழங்க வேண்டும்” என்று அரசாணையில் கூறப்பட்டுள்ளது.</p>
<p> </p>
