வாய்ப்பு வாசல்
4 Dec 2025, 2:59 pm

அரசுச் செவிலியர் பணி - 2,147

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் துணை செவிலியர் மற்றும் கிராமப்புற சுகாதார செவிலியர் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியாகியுள்ளது. மொத்தம் 2 ஆயிரத்து 147 பணியிடங்களை நிரப்பப் போவதாக தமிழ்நாடு மருத்துவ ஊழியர் தேர்வு வாரியம்(Tamil Nadu Medical Recruitment Board) தெரிவித்திருக்கிறது. வயது வரம்பு - ஜூலை 1, 2023 அன்று பொதுப்பிரிவினர் 42 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்கக்கூடாது. பொதுப்பிரிவினரில் மாற்றுத் திறனாளிகள் 52 வயதுக்குள்ளும், ஆதரவற்ற விதவைகள் 59 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். பொதுப் பிரிவினரைத் தவிர மற்ற பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு உச்சவயது வரம்பு இல்லை. அதேபோல், பொதுப் பிரிவினரிலும் முதன்முறையாக விண்ணப்பிப்பவர்களுக்கும் உச்சபட்ச வயது வரம்பு இல்லை. +2 படிப்பை நிறைவு செய்து விட்டு, இந்த இரண்டு பணியிடங்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட பயிற்சியை மேற்கொண்டி ருக்க வேண்டும். மேலும் தங்கள் படிப்பை தமிழ்நாடு செவிலியர் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். தேர்வு முறை - பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் செவிலியர் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அந்த மதிப்பெண்கள் அடிப்படையில்தான் தேர்வு இருக்கும். இந்தப் பணியிட நிரப்புதல் குறித்த கூடுதல் விபரங்களுக்கு www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். விண்ணப்பங்களை நிரப்புவதற்கான கடைசித்தேதி டிசம்பர் 14, 2025 ஆகும்.

உளவுத்துறையில் பணி - 362

ஒன்றிய அரசின்கீழ் இயங்கும் உளவுத்துறையில் பன்முகப்பணி ஊழியர்கள்(Multi Tasking Staff) தேவைப்படுகிறார்கள். மொத்தம் 362 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறி விக்கையை வெளியிட்டுள்ளனர். நாடு முழு வதும் உள்ள ஒன்றிய உளவுத்துறை அலுவல கங்களில் பணி நியமனம் இருக்கும். கல்வித்தகுதி - குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு படித்திருந்தால் போதுமான தாகும். எந்த மாநிலத்தில் பணி நியமனம் கோரு கிறாரோ, அந்த மாநிலத்தில் வசிப்ப தற்கான இருப்பிடச் சான்று அவசியமாகும். வயது வரம்பு - டிசம்பர் 14, 2025 ஆம் தேதிப்படி வயது கணக்கிடப்படும் குறைந்தபட்ச வயதாக 18 மற்றும் அதிகபட்ச வயதாக 25ம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு(OBC) 3 ஆண்டுகளும் உச்சபட்ச வயது வரம்பில் தளர்ச்சி வழங்கப்படும். தேர்வு முறை - ஆன்லைனில் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். இதில் தேர்ச்சி பெறுகிறவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இரண்டிலும் பெறும் மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு தேர்ச்சி இருக்கும். தேர்வு மையங்கள் - தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோயம்புத்தூர், சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய இடங்களில் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். நகரவாரியான காலியிடங்கள், சமூகவாரி யான காலியிடப் பகிர்வு, தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் கூடுதல் விபரங்களுக்கு முழுமையான அறிவிக்கையைப் பார்வையிட லாம். அது www.mha.gov.in என்ற இணையதளத்தில் உள்ளது. விண்ணப்பிப்பதற்கான கடைசித்தேதி டிசம்பர் 14, 2025 ஆகும்.

புதுச்சேரி அரசில் காலியிடங்கள் 327

புதுச்சேரி அரசில் பல்வேறு பணிகளுக்கான 327 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பம் வெளியாகி உள்ளது.ஏதேனும் ஒரு பிரிவில் (கலை, அறிவியல், வேளாண்மை, பொறியியல்) இளநிலை பட்டம் /முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு விபரம் ஒவ்வொரு பணி யிடங்களை பொறுத்து வேறுபடும். ஜூலை 1, 2025 தேதியின்படி குறைந்த பட்சம் 19நிரம்பியிருக்க வேண்டும் அதிகபட்ச வயது வரம்பு 32ஆகும். தகுதியானவர்கள் CGL- தேர்வின் மூலம் எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களுக்கு https://recruiment.py.gov.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். விண்ணப்பிப்பதற்குக் கடைசித் தேதி டிசம்பர் 14, 2025 ஆகும்.

கவனத்திற்கு

ஜூலை 12, 2025 அன்று நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முடிவுகள் அக்டோபர் 22, 2025 அன்று வெளியிடப்பட்டது. இணையதளத்தில் மதிப்பெண்கள் மற்றும் பிரிவு வாரியான தரப்பட்டியலும் அதில் இடம் பெற்றது. தரப்பட்டியல் அடிப்படையில் முதல் கட்ட கவுன்சிலிங் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு டிசம்பர் 8, 2025 முதல் டிசம்பர் 12, 2025 வரையில் நடைபெறுகின்றன. இதற்கு அழைப்பு விடுக்கப்பட்டோர் விபரங்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ளன. நல்ல மதிப்பெண்களைப் பெற்றிருந்தவர்கள் அதைச் சரிபார்த்துக் கொள்ளலாம்.