முந்தய பக்கம்

லஞ்சம் வாங்கிய அரசு வழக்குரைஞர் கைது

6 Dec 2025, 2:48 pm
லஞ்சம் வாங்கிய அரசு வழக்குரைஞர் கைது
<p><strong>லஞ்சம் வாங்கிய அரசு வழக்குரைஞர் கைது</strong></p> <p>தருமபுரி, டிச.6- போக்சோ வழக்கை நடத்துவதற்கு, பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்ற அரசு சிறப்பு வழக்கு ரைஞரை ஊழல் தடுப்புப்பிரிவு போலீசார் கைது செய்தனர். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்குள்ளானார். இது தொடர்பாக போக்சோ சட்டப்பிரிவில் வழக் குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசா ரணை, தருமபுரி மாவட்ட போக்சோ சிறப்பு &nbsp;நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வ ழக்கில், பாதிக்கப்பட்ட சிறுமிக்காக அரசு சார்பில், பென்னாகரம் சாலை பகுதியைச் சேர்ந்த அரசு வழக்குரைஞர் வி.கல்பனா ஆஜராகி வந்தார். இந்நிலையில், பாதிக்கப் பட்ட சிறுமியின் தந்தையிடம், வழக்கில் ஆஜ ராவதற்காக ரூ.15 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என்று கல்பனா கேட்டுள்ளார். ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத சிறுமி யின் தந்தை, இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஊழல் தடுப்புப்பிரிவு போலீசாரிடம் புகா ரளித்தார். இதையடுத்து போலீசாரின் ஆலோ சனைப்படி, முதல் தவணையாக ரூ.10 ஆயி ரம் ரசாயனம் தடவிய நோட்டுகளை சிறுமி யின் தந்தை அரசு வழக்குரைஞரின் வீட்டிற்கு சென்று கொடுத்துள்ளார். அப்போது அங்கு &nbsp;மறைந்திருந்த ஊழல் தடுப்புப்பிரிவு காவல் ஆய்வாளர் பெருமாள் தலைமையிலான போலீசார், அரசு வழக்குரைஞர் கல்ப னாவை கைது செய்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram