சிதம்பரத்தில் அரசு சட்டக் கல்லூரி அமைக்க வேண்டும் இந்திய மாணவர் சங்கம் மனு
11 Jun 2026, 11:11 pm
<p><strong>சிதம்பரத்தில் அரசு சட்டக் கல்லூரி அமைக்க வேண்டும் இந்திய மாணவர் சங்கம் மனு</strong></p><p>சிதம்பரம், ஜூன் 11- சிதம்பரத்தில் அரசு சட்டக் கல்லூரி அமைக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, இந்திய மாணவர் சங்கத்தின் கடலூர் மாவட்டக் குழுவினர் சட்ட மன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரியிடம் மனு அளித்தனர். சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப் பில், இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் சபரி தலைமை யில், மாவட்ட இணைச் செயலாளர் சிவநந்தினி, மாவட்டக் குழு உறுப்பினர் கள் திருமால், கனிமொழி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அவர்கள் அளித்த மனுவில், "கல்வித் தளமாக விளங்கும் சிதம்பரத்தைச் சுற்றியுள்ள கிராமப்புற மற்றும் ஏழை, எளிய மாண வர்கள் சட்டப்படிப்பை மேற்கொள்ள விரும்பி னாலும், தற்போது தொலை தூர மாநகரங்களுக்குச் சென்று படிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இதற் கான கூடுதல் செலவுகள் மற்றும் பொருளாதாரச் சுமைகள் காரணமாகப் பல மாணவர்கள் சட்டப் படிப் பைத் தேர்வு செய்ய முடி யாத சூழல் நிலவுகிறது. எனவே, மாணவர்களின் நலன் கருதி சிதம்பரத்தில் அரசு சட்டக் கல்லூரி அமைக்க அரசு உடனடி நட வடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தப்பட் டுள்ளது. மனுவைப் பெற்றுக் கொண்ட சட்டமன்ற உறுப்பி னர் தமிமுன் அன்சாரி, இந்தக் கோரிக்கையின் நியா யத்தன்மையை ஏற்றுக் கொண்டார். மேலும், நடை பெறவுள்ள சட்டமன்றக் கூட்டத்தொடரில் இந்தக் கோரிக்கையைச் சட்ட மன்றத்தில் முன்வைத்து, சிதம்பரத்தில் சட்டக் கல்லூரி அமைப்பதற்கான பணி களை முன்னெடுக்கத் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற் கொள்வதாக அவர் உறுதி யளித்தார்.</p>
