முந்தய பக்கம்

விருது பெற்ற இருளர் வாரிசுகளுக்கு அரசு வேலை

19 Feb 2026, 3:09 pm
விருது பெற்ற இருளர் வாரிசுகளுக்கு அரசு வேலை
<p><strong>விருது பெற்ற இருளர் வாரிசுகளுக்கு அரசு வேலை</strong></p> <p>செங்கல்பட்டு, பிப். 19- &nbsp;பாம்பு பிடி தொழிலில் சாதனை படைத்து 2023-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்ற சென்னேரி கிராமத்தைச் சேர்ந்த இருளர் பழங்குடியின ஆளுமைகள் மாசி, வடிவேல் ஆகியோரின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. மாசியின் வாரிசு தங்கராசு என்பவருக்கு இரவு காவலர் பணியும், வடிவேலின் தத்து மகன் சுரேஷ் என்பவருக்கு தோட்டப் பணியாளர் பணியும் குமிழி ஏகலைவா மாதிரி உண்டு,உறைவிடப் பள்ளியில் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பணி நியமன ஆணையைச் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வழங்கினார். தங்களுக்கு அரசு வேலை வழங்கியதற்கு மாசி மற்றும் சடையன் குடும்பத்தினர் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளனர். குறிப்பாக, தமிழக முதல்வர் வழங்கிய மகளிர் உரிமைத் தொகை ரூ.5ஆயிரத்தை பயன்படுத்தி, வேலைக்குச் செல்லும் மகன்களுக்குப் புதிய துணிகள் வாங்கிக் கொடுத்துப் பணிக்கு அனுப்ப உள்ளதாகக் குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram