முந்தய பக்கம்

உயிரிழந்த மாணவியின் தாயாருக்கு அரசுப்பணி

13 Mar 2026, 4:52 pm
உயிரிழந்த மாணவியின் தாயாருக்கு அரசுப்பணி
<p><strong>உயிரிழந்த மாணவியின் தாயாருக்கு அரசுப்பணி</strong></p> <p>சேலம், மார்ச் 13- காதலித்து ஏமாற்றியதால் உயி ரிழந்த மாணவியின் தாயாருக்கு அரசுப் பணி வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். சேலம் மாவட்டம், வீரபாண்டி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியை சேர்ந்த &nbsp;பட்டியலின மாணவியை, சாதி ஆதிக்க வாதியான ஒருவர் காதலித்து வந்துள் ளார். அப்போது, அந்த இளைஞர், சாதிய ரீதியாக பேசியதால் மன முடைந்த மாணவி, தற்கொலை செய்து &nbsp;கொண்டார். மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மாணவர், வாலிபர், மாதர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய &nbsp;நிவாரணம், அரசுப்பணி, இலவச வீடு &nbsp;வழங்க வேண்டும் என வலியுறுத்தி னர். இந்நிலையில் சேலம் மாவட்ட &nbsp;ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மாவட்ட அதிகாரி ஜெயக் குமார், உயிரிழந்த மாணவியின் வீட் டிற்கு சென்று, மூன்று மாதத்திற்கான மளிகைப் பொருட்களை வழங்கினார். மேலும், மாணவியின் தாயாருக்கு சமை யல் பணியாளர் பணியும், தேர்தல் முடிந்த பிறகு இலவச வீடும் வழங்கப் படும் என உறுதியளித்தார். இந்நிகழ் வில், மாணவர் சங்க மாவட்டத் தலை வர் டார்வின், வாலிபர் சங்க துணை ஒருங்கிணைப்பாளர் கோகுல் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram