தீண்டாமை ஒழிப்பு முன்னணி முயற்சி உயிரிழந்த மாணவியின் தாயாருக்கு அரசு வேலை!
2 Oct 2026, 1:26 am

தீண்டாமை ஒழிப்பு முன்னணி முயற்சி உயிரிழந்த மாணவியின் தாயாருக்கு அரசு வேலை!

சேலம், அக்.1 –சேலத்தில் வன்கொடுமையால் உயிரிழந்த பட்டியலின கல்லூரி மாணவியின் தாயாருக்கு, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தொடர் முயற்சியால் அரசு சமூக நீதி மாணவியர் விடுதியில் உதவியாளர் பணி நியமனம் வழங்கப்பட்டது.

சேலம் மாவட்டம், கொம்பாடிபட்டி கிராமம் கல்பாரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகள் கோபிகா, கல்லூரி மாணவியான இவர் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு கடந்த மார்ச் 4-ஆம் தேதி உயிரிழந்தார். இச்சம்பவத்தை கண்டித்தும், குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் சேலம் மாவட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் புகார்அளிக்கப்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.தொடர்ந்து, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உடனடியாக நிவாரணத் தொகை மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர், காவல்துறை எஸ்பி மற்றும் ஆதிதிராவிடர் நல அலுவலரிடம் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அமைப்பின் மாநில நிர்வாகி ராணி, மாவட்டத் தலைவர் ஆர்.குழந்தைவேல், மாவட்ட பொதுச் செயலாளர் வி.இளங்கோ உள்ளிட்ட நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.

முன்னணியின் தொடர் அழுத்தத்தின் விளைவாக, முதற்கட்டமாக ரூ.12 லட்சம் நிவாரண தொகை வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, கோபிகாவின் தாயார் ரதி-க்கு எடப்பாடி வட்டத்தில் உள்ள அரசு சமூக நீதி மாணவியர் விடுதியில் உதவியாளர் பணி நியமன ஆணை வழங்கப்பட்டு, அவர் பணியிலும் சேர்ந்துள்ளார். இது முன்னணியின் போராட்டத்திற்கு கிடைத்த முக்கிய வெற்றி.இத்துடன், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வீட்டுமனைப் பட்டா மற்றும் ஓய்வூதியத்தையும், தமிழ்நாடு ஆதிதிராவிடர் நல ஆணையத்தின் உத்தரவு வந்தவுடன் விரைவாக பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கணேசன் உறுதி அளித்துள்ளார்.