உடலுறுப்பு தானம் செய்த சிறுவனுக்கு அரசு மரியாதை
13 Mar 2026, 4:52 pm
<p><strong>உடலுறுப்பு தானம் செய்த சிறுவனுக்கு அரசு மரியாதை</strong></p>
<p>உடுமலை, மார்ச் 13- உடுமலையில் உடலுறுப்பு தானம் செய்த சிறுவனின் உடலுக்கு வெள்ளி யன்று அரசு மரியாதை செலுத்தப்பட் டது. திருப்பூர் மாவட்டம், உடுமலை விக் னேஷ் - பிரியதர்ஷினி தம்பதியினரின் மகன் சிவாதித்யா (6). கடந்த சில நாட்களுக்கு முன்பு விபத்தில் காயம டைந்து, கோவையிலுள்ள ராயல் கேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்ததை மருத்துவக்குழு உறுதிசெய்தது. இதைத்தொடர்ந்து சிவாதித்யாவின் பெற்றோர் தங்கள் மகனின் உடலு றுப்புகளை தானமாக வழங்க முன்வந்த னர். தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணை யம் (TRANSTAN) விதிமுறைகளின்படி, பல உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் கொண்ட குழு, சிறுவனின் கல்லீரல், சிறுநீரகங்கள் மற்றும் இதயம் ஆகிய உடலுறுப்புகள் ராயல் கேர் சேலம் மற்றும் சென்னையிலுள்ள மருத் துவமனைகளில் உள்ள நோயாளிக ளுக்கு பொருத்தினர். தொடர்ந்து, உடு மலை சங்கர் நகரில் வைக்கப்பட்டிருந்த சிவாதித்யாவின் உடலுக்கு, அவரது தியாகத்தை போற்றும் வகையில் உடு மலை வருவாய் கோட்டாட்சியர் குமார், வட்டாட்சியர் கெளரிசங்கர் உள்ளிட் டோர் அரசு மரியாதை செலுத்தினர்.</p>
