குடியாத்தம் தட்டப்பாறை ஊராட்சியில் அரசு மேனிலைப்
9 Feb 2026, 3:02 pm
<p>குடியாத்தம் தட்டப்பாறை ஊராட்சியில் அரசு மேனிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கே.சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது. குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய முன்னாள் துணைத்தலைவர் சி.ஏ.ஏகாம்பரம் 72 மாணவர்களுக்கு மிதிவண்டியை வழங்கினார். இதில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் சத்யா கோட்டீஸ்வரன், தலைமை ஆசிரியர் ஜோதி பாஸ்கரன் மற்றும் தண்டபாணி, தேவராஜ், கே.பி.தங்கராஜ், சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
