தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நிலுவை கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை

6 Jan 2026, 4:23 pm
நிலுவை கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை
<p><strong>நிலுவை கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை</strong></p> <p>சென்னை, ஜன.6 &ndash; தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை வரவேற்ப தோடு, நிலுவையில் உள்ள கோரிக் கைகளை அரசு நிறைவேற்ற வேண் டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் தலை வர் மு.பாஸ்கரன், பொதுச் செயலா ளர் வெ.சோமசுந்தரம் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில், ஒன்றிய அரசு 1.1.2004 முதல் பங்களிப்பு (புதிய) ஓய்வூதிய திட்டத்தினை நடை முறைக்கு கொண்டு வந்தது. &nbsp;தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தின் பெரும் முயற்சியினால் ஜாக்டோ- ஜியோ உருவாக்கப்பட்டது. அரசு ஊழியர் சங்கம், ஜாக்டோ-ஜியோ போராட்டம் நடத்தி, கடந்த 23 ஆண்டு களாக அரசு ஊழியர், ஆசிரியர்கள் செலுத்திய 10 சதவீத பங்களிப்பு தொகையை, ஒன்றிய அரசின் ஓய்வூ திய ஒழுங்காற்று ஆணையத்தில் செலுத்திடாமல் தடுத்து வந்தோம். இந்நிலையில், 2021 ஆம் ஆண்டு &nbsp;சட்டமன்ற தேர்தலின்போது அளித்த &nbsp;வாக்குறுதியின்படி, தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை &nbsp;முதலமைச்சர் அறிவித்துள்ளார். பல்வேறு நல்ல அம்சங்கள் உள்ள தால் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் &nbsp;இதனை வரவேற்கிறது. இந்த ஓய்வூதி யத் திட்டத்தில் இருக்கிற சில குறை பாடுகளை விரைவில் களைந்திட வேண்டுமென்று முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறோம். புதிய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ளவர்களுக்கு. பயனளிக்கக் கூடியதாக இந்த திட்டம் இருந்தாலும், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக &nbsp;தொகுப்பூதியம், மதிப்பூதியம், ஒப்பந் தம், தினக்கூலி, அவுட்சோர்சிங் உள்ளிட்டவற்றில் பணியாற்றி வரும் &nbsp;லட்சக்கணக்கான சத்துணவு, அங்கன் வாடி ஊழியர்கள், ஊர்புற நூலகர்கள், எம்ஆர்பி செவிலியர்கள், ஊராட்சி செயலாளர்கள் போன்றோருக்கும், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணி யாற்றும் வருவாய் கிராம ஊழியர் களுக்கும் காலமுறை ஊதியம், குறைந்தபட்ச ஓய்வூதியம் அறி விக்காதது ஏமாற்றத்தை அளிக்கிறது. சாலைப் பணியாளர்களின் 41 &nbsp;மாத பணி நீக்க காலத்தினை உயர்நீதி மன்ற உத்தரவின்படி பணிக்கால மாக அறிவிக்கும் உத்தரவாதத்தை யும் அளிக்காதது பெரிய ஏமாற் றத்தை ஏற்படுத்தி உள்ளது. கருணை அடிப்படையிலான பணி நியமனத்தை 5 சதவீதமாக குறைத்ததை பழையபடி மீண்டும் 25 சதவீதமாக உயர்த்தி வழங்க &nbsp;வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகள் மீது முதலமைச்சர் உடனே தனிக்கவனம் செலுத்தி, போராடிக் கொண்டிருக்கின்ற ஊழியர்களின் வாழ்வில் விடியலை ஏற்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.