முந்தய பக்கம்

அரசு ஊழியர் சங்க பிரச்சார இயக்கம் துவக்கம்

24 Nov 2025, 5:22 pm
அரசு ஊழியர் சங்க பிரச்சார இயக்கம் துவக்கம்
<p><strong>அரசு ஊழியர் சங்க பிரச்சார இயக்கம் துவக்கம்</strong></p> <p>கோவை, நவ.24- காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து அரசு ஊழியர் சங் கத்தினர் திங்களன்று பிரச் சாரத்தை துவக்கினர். பழைய ஓய்வூதிய திட்டத் தை அமுல்படுத்த வேண் டும். அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும். &nbsp;சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழி யர்கள், வருவாய் கிராம ஊழியர்கள், ஊர்ப் புற நூலகர்கள் உள்ளிட்டோருக்கு சிறப்பு &nbsp;காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். &nbsp;நெடுஞ்சாலைத் துறையில் பணியாற்றும் &nbsp;சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க &nbsp;காலத்தை சென்னை உயர்நீதிமன்ற ஆணை யின்படி பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் &nbsp;சார்பில் தமிழகத்தின் 9 முனைகளில் இருந்து நவம்பர் 24 முதல் 28 வரை &nbsp;பிரச்சார இயக்கம் நடைபெறுகிறது. அதன் &nbsp;ஒரு பகுதியாக கோவையில் தமிழ்நாடு அரசு &nbsp;ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ச.ஜெகநா தன் தலைமையில் நான்கு நாட்கள் நடை பெறும் வாகன பிரச்சாரம் முதல் நாளான திங்களன்று கவுண்டம்பாளையத்தில் உள்ள &nbsp;அரசு தொழிற்பயிற்சி வளாகத்தில் துவங்கி யது. &nbsp;துவக்க நிகழ்விற்கு வட்டக்கிளை தலை வர் ஆர்.ராமசாமி தலைமை தாங்கினார். பின்னர் கோவை தொழிலாளர் நலத்துறை &nbsp;அலுவலகம், காரமடை, மேட்டுப்பாளையம், அன்னூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்களில் அரசு ஊழி யர்களை சந்தித்து துண்டு பிரசுரம் வழங்கி கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர். இதில், அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் ஆ.அம்சராஜ், மாநில துணை செயலாளர் கே.சி.ஏ.தினேஷ், மாவட் டச் செயலாளர் ப.செந்தில்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.ரவி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram