தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துக! தென்காசி, தூத்துக்குடியில் அரசு ஊழியர் சங்கத்தினர் தர்ணா

29 Oct 2026, 10:28 pm
பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துக! தென்காசி, தூத்துக்குடியில் அரசு ஊழியர் சங்கத்தினர் தர்ணா

பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துக! தென்காசி, தூத்துக்குடியில் அரசு ஊழியர் சங்கத்தினர் தர்ணா

தென்காசி, அக்.29-தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திற்கான (TAPS) விதிமுறைகளை உடனடியாக வெளியிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கானநடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும்.சிறப்புக்காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் அனைவருக்கும் முறையான காலமுறை ஊதியம் வழங்குவதுடன், TAPS உள்ளிட்ட ஓய்வூதியப்பலன்களையும் வழங்க வேண்டும்.தொழிற்பயிற்சி நிலையங்களில் பணிபுரியும் PPP மற்றும் COE திட்டப்பயிற்றுநர்கள், உதவியாளர்கள் ஆகியோரைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளைவலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தென்காசி,தூத்துக்குடியில் தர்ணா போராட்டம்நடைபெற்றது.

தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்டத்தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் மைக்கேல் லில்லி புஷ்பம்தொடக்க உரையாற்றினார்.மாவட்டச் செயலாளர் வெங்கடேஷ் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டத் தலைவர் சுதர்சன் நிறைவுரையாற்றினார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே தர்ணா போராட்டம் மாவட்ட தலைவர் மகேந்திர பிரபு தலைமையில் நடைபெற்றது. சங்கரலிங்கம் துவக்க உரையாற்றினார் அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர்உமாதேவி கோரிக்கைகளை விளக்கி பேசினார். துறை வாரிச் சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் ஆதரித்துப்பேசினர். அரசு ஊழியர் சங்க மேனாள் துணைப் பொதுச் செயலாளர் வெங்கடேசன் சிறப்புரையாற்றினார். அரசுஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் முருகன் நிறைவுரையாற்றினார். 400க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள்கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.