தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

எஸ்ஐஆர்-யைக் கண்டித்து அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

3 Dec 2025, 2:59 pm
எஸ்ஐஆர்-யைக் கண்டித்து அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
<p><strong>எஸ்ஐஆர்-யைக் கண்டித்து அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p> <p>தருமபுரி, டிச.3- வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளிலுள்ள நெருக்கடிகளை கைவி டக்கோரி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங் கத்தினர் புதனன்று ஆர்ப்பாட்டத்தில் &nbsp;ஈடுபட்டனர். வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் போதிய அவகாசம் வழங் காமல், அரசு ஊழியர்களுக்கு தேர்தல் &nbsp;ஆணையம் நெருக்கடி கொடுத்து வரு கிறது. எனவே தேர்தல் ஆணையம் வாக் காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை கைவிட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் புதனன்று தருமபுரி மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி வட் டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, ஊரக வளர்ச் சித்துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் முகமது இலியாஸ் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத்தலைவர் பா.சங்கர், முன்னாள் துணைத்தலைவர் சி.காவேரி ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசி னர். அரூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில், அரசு ஊழியர் சங்க மாவட்ட &nbsp;துணைத்தலைவர்கள் அகிலன் அமிர்த ராஜ், ஓசி.அழகிரி, காரிமங்கலத்தில் சங் கத்தின் மாவட்டச் செயலாளர் ஏ.தெய் வானை, சத்துணவு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் கே.தேவகி, பென் னாகரத்தில் வட்டத் தலைவர் திம்மரா யன், பாலக்கோட்டில் வட்ட நிர்வாகி சாக்ரடீஸ் உட்பட பலர் கலந்து கொண் டனர். கோவை கோவை - மேட்டுப்பாளையம் &nbsp;சாலை ஐடிஐ வளாகம் மற்றும் தொழிலா ளர் நலத்துறை, வேலைவாய்ப்புத் துறை ஆகிய இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வட்ட கிளைத் தலை வர் ராமசாமி, செயலாளர் ஆர்.ரவி, &nbsp;பொருளாளர் வளர்மதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட் டத் தலைவர் ச.ஜெகநாதன், பொருளா ளர் மதியரசன் உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.