அடக்குமுறைகளை எதிர்கொள்ளும் அரசு ஊழியர்கள்!
5 Nov 2026, 12:47 am

அடக்குமுறைகளை எதிர்கொள்ளும் அரசு ஊழியர்கள்!

ஈரோடு, நவ.4-அரசு ஊழியர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை மேற்கொள்ளும் துறை அதிகாரிகளின் நடவடிக்கைகளை கண்டித்து, ஈரோடு வட்டாட்சியர் அலுவலகம் வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அரசுக்கும், மக்களுக்கும் பாலமாக விளங்கும் அரசு ஊழியர்களுடன் இணக்கமான போக்கை கடைபிடிக்க வேண்டும். ஊழியர்களை பழிவாங்கும் போக்கு, மிரட்டல் மற்றும் ஒடுக்குமுறை நடவடிக்கைகளை துறை அதிகாரிகள் உடனடியாக கைவிட வேண்டும். அரசாங்கத்தின் தூதுவர்களான அரசு ஊழியர்களை, மக்களுக்கு எதிராக நிறுத்தும் துறை அதிகாரிகளின் தந்திரம் மிக மலிவானது. இப்பிரச்சனையில் தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு துறை அதிகாரிகளை எச்சரித்து ஒழுங்குபடுத்த வேண்டும் என வலியுறுத்தி ஈரோடு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் புதனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.ரமேஷ் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர்கள் சு.செந்தில்நாதன், அ.ராக்கிமுத்து, பி.கெளரிசங்கர், மாவட்ட இணைச்செயலாளர்கள் ஜி.சசிகலா, வி.எஸ்.சரவணமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் ச.விஜயமனோகரன் கண்டனவுரையாற்றினார். துறைவாரி சங்க மாநில, மாவட்ட நிர்வாகிகள் சிறப்புரையாற்றினர். முடிவில், மாவட்டப் பொருளாளர் ஆர்.சுமதி நன்றி கூறினார்.

சேலம்

இதேபோன்று, கூட்டுறவுத்துறை ஊழியர்கள் மீது வழங்கப்பட்டுள்ள 17(அ) குற்றச்சாட்டுகளை ரத்து செய்ய வேண்டும். ஊழியர் விரோத நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும். அரசு வேலைகளில் அவுட்சோர்சிங் முறையில் ஆட்களை நியமிக்கும் முடிவை கைவிட்டு, இளைஞர்களின் வேலைவாய்ப்பைப்பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் புதனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத் தலைவர் வெ.அர்த்தனாரி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் சுரேஷ் பேசினார். இதில் மாவட்டப் பொருளாளர் சண்முகம், துணைத் தலைவர்கள், இணைச் செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தருமபுரி

தருமபுரி ஆட்சியர் அலுவலகம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, அரசு ஊழியர் சங்க மாவட்ட இணைச்செயலாளர் முருகன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் எம்.சுருளிநாதன், மாவட்டச் செயலாளர் ஏ.தெய்வானை, சத்துணவு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் தங்கராஜ், நில அளவை ஒன்றிப்பின் மாவட்டத் தலைவர் பிரபு, பொது சுகாதார துறை அலுவலர் சங்க மாநில தணிக்கையாளர் யாரப்பாஷா, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் பிரின்ஸ், ஓய்வூதியர் சங்க மாவட்ட நிர்வாகி சி.காவேரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.