அரசு ஊழியர்கள் பிரச்சார இயக்கம்
27 Nov 2025, 3:11 pm
<p>முதலமைச்சரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், டிசம்பர் 4ல் நடைபெறவிருக்கும் மறியல் போராட்டத்தை விளக்கியும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் பிரச்சார இயக்கம் செங்கல்பட்டு மாவட்டத்தில் சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலகம், அச்சரப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகம், மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகம், மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலகம், திருக்கழுக்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலகம், திருக்கழுக்குன்றம் வட்டாட்சியர் அலுவலகம், செங்கல்பட்டு வணிகவரித்துறை அலுவலகம் இறுதியாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இப் பிரச்சாரத்தில் மாநில தலைவர் மு.பாஸ்கரன், மாநில துணைத்தலைவர் தெ.வாசுகி, மாவட்டசெயலாளர் வசந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
