தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அரசு ஊழியர் சங்க அமைப்பு தின விழா தருமபுரி, மே 6- அரசு ஊழியர் சங்கத்தின் அமைப்பு தின

7 May 2026, 1:55 am
அரசு ஊழியர் சங்க அமைப்பு தின விழா தருமபுரி, மே 6- அரசு ஊழியர் சங்கத்தின் அமைப்பு தின
<p><strong>அரசு ஊழியர் சங்க அமைப்பு தின விழா</strong></p><p>தருமபுரி, மே 6- அரசு ஊழியர் சங்கத்தின் அமைப்பு தினம், கொடியேற்றி கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 43 ஆவது அமைப்பு தினத்தையொட்டி தருமபுரி மாவட்டத்தில் கொடியேற்றி கொண்டாடப்பட்டது. கடத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்விற்கு, சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் சுருளிநாதன், சங்கத்தின் கொடியினை ஏற்றி வைத்து, பேசினார். இதில், சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் தங்கராசு உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று, நல்லம்பள்ளியில் வட்டத் தலைவர் சந்திரன், பாலக்கோட்டில் மாவட்ட நிர்வாகி சாக்ரடீஸ், தருமபுரியில் மாவட்டச் செயலாளர் ஏ.தெய்வானை ஆகியோர் தலைமையில் கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாவட்ட இணைச்செயலாளர் ரா.மீன்முருகன், வட்டச் செயலாளர் மகேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர். நாமக்கல் நாமக்கல், திருச்செங்கோடு, இராசிபுரம் வட்டங்களில் அமைப்பு தின கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.தனசேகரன், செயலாளர் பி.இளங்கோவன், பொருளாளர் பி.தியாகராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் ரவி, துணைத்தலைவர் தாமோதரன், இணைச்செயலாளர் பி.பார்த்தீபன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மயில்சாமி, சிஐடியு மாவட்டச் செயலாளர் ந.வேலுசாமி, அரசு ஊழியர் சங்க முன்னாள் செயலாளர் ஆர்.முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.