ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கையை கண்டித்து அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
1 Dec 2025, 5:20 pm
<p><strong>ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கையை கண்டித்து அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>தருமபுரி, டிச.1- ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கையை கண் டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங் கத்தின் சார்பில் அரசு அலுவலகங் கள் முன்பு திங்களன்று ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. தொழிலாளர்களுக்கும், தொழிற்சங்கத்திற்கும் பாதுகாப்பு அரணாக இருந்து வந்த 44 தொழி லாளர் நலச் சட்டங்களை ஒன்றிய பாஜக அரசு 4 தொகுப்பு சட்டங்க ளாக மாற்றியுள்ளது. அரசு ஊழியர் மற்றும் தொழிலாளர்களின் உரி மைகளை பறித்ததோடு மட்டுமல் லாமல், கார்ப்பரேட் நிறுவனங்க ளுக்கு சாதகமாகவும், தனியார் மயத்தை ஊக்குவிக்க கூடிய வகை யிலும் இச்சட்டங்கள் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொழிலாளர் விரோத நடவடிக்கை யை கண்டித்தும், இச்சட்டத்தினை திரும்பப் பெற வலியுறுத்தியும் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி வட்டார வளர்ச்சி அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் முகமது இலியாஸ் தலை மை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்டப் பொருளாளர் அன்பழ கன், ஜாக்டோ ஜியோ நிதி காப்பா ளர் கே. புகழேந்தி வேளாண்மைத் துறை அமைச்சு பணியாளர் சங்கத் தின் மாநிலத் தலைவர் ஜெயவேல் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். காரிமங்கலத்தில் அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ. தெய் வானை, பென்னாகரத்தில் வட்டச் செயலாளர் திம்மராயன் நிர்வாகி சி. காவேரி, அரூரில் மாவட்ட துணைத் தலைவர்கள் சி. அழகிரி, அகிலன் அமிர்தராஜ், பாப்பிரெட்டிபட்டியில் வட்டச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, சத்துணவு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் தங்கராஜ், நல்லம் பள்ளியில் வட்ட தலைவர் தினமணி சத்துணவு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் பெ. மகேஸ்வரி, பாலக் கோட்டில் வட்ட நிர்வாகிகள் குண சேகரன், ராமகிருஷ்ண ஆகியோர் பங்கேற்று பேசினர். நாமக்கல் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்க மாவட்ட துணைத்தலைவர் இளவேந்தன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் என்.வேலுச் சாமி வாழ்த்திப் பேசினார். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலா ளர் ஆர்.முருகேசன் கோரிக்கை களை விளக்கி பேசினார். இதில், ஏராளமானோர் கலந்து கொண்ட னர். சேலம் சேலம், அஸ்தம்பட்டி வட்டாச்சி யர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சேலம் நகர வட்டக்கிளை செயலாளர் வெங்க டேசன் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலா ளர் சுரேஷ், மாவட்டத் தலைவர் வெ. அர்த்தனாரி, மாவட்ட இணைச் செய லாளர் திருநாவுக்கரசு, வட்டக் கிளை செயலாளர் ஸ்ரீபதி பொருளா ளர் கந்தன் உள்ளிட்ட பலர் பங் கேற்றனர்.</p>
<p> </p>
