வருவாய்த்துறை ஊழியர்களின் போராட்டத்திற்கு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆதரவு ஆர்ப்பாட்டம்
4 Mar 2026, 5:01 pm
<p><strong>வருவாய்த்துறை ஊழியர்களின் போராட்டத்திற்கு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆதரவு ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>உடுமலை, மார்ச் 4- கடந்த 8 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் வருவாய்த்துறை ஊழியர் களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், உடுமலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தி னர் புதனன்று ஆர்ப்பாட்டம் நடத்தி னர். வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பணி பாது காப்புச் சட்டத்தை வழங்க வேண்டும். அனைத்து நிலை ஊழியர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியத்தை வழங்க வேண்டும். கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண் டும். வருவாய் மற்றும் நில அளவைத் துறையில் உள்ள காலிப்பணியி டங்களை வெளி முகமை மூலம் நிரப்பு வதை கைவிட வேண்டும். கருணை அடிப்படையிலான பணி நியமனங் களை மீண்டும் 25 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 8 நாட்களாக தமிழ்நாடு முழு வதும் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் போராடி வரு கின்றனர். அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு அரசு ஊழி யர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தி னர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தின் உடுமலை வட்டக்கிளை செயலா ளர் வெங்கிடுசாமி தலைமை வகித்தார். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பால சுப்பிரமணியன், சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எலிச பெத், நெடுஞ்சாலைத் துறை சங்கத்தின் செயலாளர் செல்லமுத்து, அரசு ஊழி யர் சங்க கோவை மாவட்டப் பொரு ளாளர் நடராஜ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநில துணைத் தலைவர் அம்சராஜ் நிறைவுரையாற்றினார். முடி வில் வட்டக்கிளை பொருளாளர் தங்கப் பாண்டி நன்றி கூறினார். அதேபோல் ஊத்துக்குளி வட்டாட் சியர் அலுவலகத்திலும் அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இணைச் செயலாளர் இராமன் பங்கேற் றுப் பேசினார். அவிநாசியில் வட்டாட்சியர் அலுவ லகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட இணைச் செயலாளர் ராமன், வட்ட கிளைச் செயலாளர் கருப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
