தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அடிப்படை வசதிகள் கேள்விக்குறியான அரசு ஊழியர் குடியிருப்புகள்

5 Dec 2025, 4:21 pm
அடிப்படை வசதிகள் கேள்விக்குறியான அரசு ஊழியர் குடியிருப்புகள்

அடிப்படை வசதிகள் கேள்விக்குறியான அரசு ஊழியர் குடியிருப்புகள்

சிதையும் கலைஞரின் கனவுத் திட்டம்?
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் சமூக நீதிக் கனவில் உதித்த, சாதாரண கடைநிலை அரசு ஊழியர்களும் கௌரவத்துடன் வாழ வேண்டும் என்ற உயர்ந்த நோக்கோடு, பெரும் செல்வந்தர்கள் குடியிருக்கும் பகுதிகளான பந்தயசாலை, ரெட்பீல்டு உள்ளிட்ட இடங்களில் தமிழ்நாடு அரசு வீட்டு வசதி வாரியம் மூலம் கட்டப்பட்ட குடியிருப்புகள் இன்று பல இடங்களில் கேள்விக்குறியாகி நிற்கின்றன. கோவையின் மையப்பகுதிகளான பந்தயசாலை மற்றும் ரெட்பீல்ட்ஸ் போன்ற இடங்களில் உள்ள குடியிருப்புகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநகராட்சி, மருத்துவம னைகள் போன்ற முக்கிய அலுவலகங்களுக்கு எளிதில் சென்று வர வசதியாக அமைக்கப்பட்டிருந்தன. ஆனால்,  இந்த பந்தய சாலை குடியிருப்புகள் இடிக்கப்பட்டு பத் தாண்டுகளுக்கு மேலாகியும், மறு கட்டுமானம் பற்றிய ஏற்பாடுகள் துளிகூட இல்லாதது, ‘இந்த இடம் நல்ல விலை போகும், ஏன் அரசு ஊழியர்களுக்கு கட்டி வாடகைக்கு விட வேண்டும்?’ என்ற வணிக நோக்கம் ஒரு சில அதிகாரி கள் மத்தியில் வேரூன்றி விட்டதோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. அடிப்படை வசதிகளற்ற குடியிருப்பு: அரசுக்கு எதிராக போராடும் ஊழியர்கள் நகரத்தின் மையப்பகுதியில் இருந்து வெகு தொலை வில் உள்ள கவுண்டம்பாளையத்தில் மொத்தமாக அரசு ஊழியர்களைக் குடி அமர்த்தியதன் விளைவு, அங்கு அடிப் படை வசதிகள் இன்றி ஊழியர்கள் தங்களின் அரசுக்கு எதி ராகவே போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. பந்தயசாலை யில் குடியிருப்புகள் இடிக்கப்பட்டு நீண்ட காலமாகியும், புதிய வீடுகள் எப்போது கட்டப்படும் என்கிற எதிர்பார்ப்பு  அரசு ஊழியர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும், பராம ரிப்புக்காக ஒதுக்கப்பட்ட நிதியைக்கூட அதிகாரிகள் முறையாக செலவிடாததால், குடியிருப்பின் அத்தியாவ சியப் பணிகளை ஊழியர்களே லட்சக்கணக்கில் செலவு செய்து பார்த்துக்கொள்ளும் அவலமும் நீடிக்கிறது. அதேநேரத்தில், கோவை கவுண்டம்பாளையம் பகுதி யில் அமைந்துள்ள ரூ.522 கோடி மதிப்பீட்டில், எட்டு பிளாக்குகள், நான்கு பிரிவுகளில் 1,848 வீடுகளுடன் கட்டப் பட்டுள்ள தமிழ்நாடு அரசு வீட்டு வசதி வாரியக் குடியிருப் புக்கு உரிய பாதுகாப்பு இல்லாதது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில்தான், கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த குடியிருப்புக்குள் புகுந்த உத்தரப்பிரதேச மாநில கொள்ளையர்கள் மூவர், அடுத்தடுத்து 13 வீடுகளின் பூட்டை உடைத்து சுமார் 46 சவரன் தங்க நகை கள், பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர். அவர்களை கவுண்டம்பாளையம் தனிப்படை போலீசார் குனியமுத்தூர் அருகே துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். “பயத்துடன்தான் வாழ்கிறோம்” திருட்டுச் சம்பவம் நடந்த நிலையில் குடியிருப்பு வாசி களிடம் பேசியபோது பல அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்தன. குடியிருப்புக்கு நிரந்தர மதில் சுவர் இல்லா ததால், இரும்புத் தகடுகளைக் கொண்டு ஒரு சில பகுதி களில் தற்காலிகமாக மூடப்பட்டிருப்பதாகவும், அவற்றை யும் சமூக விரோதிகள் தள்ளிவிட்டு உள்ளே வரக்கூடிய நிலை இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். குடியிருப்பு வாசி நாகமணி, “கடந்த மூன்று ஆண்டுக ளாக வசித்து வருகிறேன். மதில் சுவர் கட்ட வேண்டும் என  நீண்ட நாட்களாகக் கேட்டு வருகிறோம். அடையாளம் தெரி யாத நபர் உள்ளே புகுந்து உலாவுவதை வீடியோ எடுத்து அதிகாரிகளிடம் காட்டியும் எந்த நடவடிக்கையும் இல்லை.  இந்த சூழலில்தான் பட்டப்பகலில் திருட்டு நடந்துள்ளது. சிசிடிவி கேமராவும் இல்லை, குழந்தைகளை வெளியே விளையாட விடவே பயமாக உள்ளது. அரசு உரிய நடவ டிக்கை எடுத்து பாதுகாப்பு வழங்க வேண்டும்,” என்று ஆதங்கப்பட்டார். இதுகுறித்து உதவி செயற்பொறியாளர் தனுஷா, “அரசு வழிகாட்டு நெறிமுறைப்படி உரிய பாதுகாப்பு கொடுக்கப் படுகிறது. மொத்தம் 18 பாதுகாவலர்கள் சுழற்சி முறையில் பணியில் உள்ளனர். இங்குள்ள வீதிகளில் 65 சிசிடிவி  கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணித்து வருகிறோம்.  “தற்காலிக மதிலுக்குப் பதிலாகத் தடுப்புகள் அமைத்தால்,  அதனைக் குடியிருப்பு வாசிகளே சிலர் இரவு நேரங்களில் உடைத்துவிட்டு உள்ளே சென்று வருகிறார்கள். இம்மாதிரி யான பிரச்சனைகள் வருவதால், இங்கு மதில் சுவர்  அமைக்க வேண்டும் என வீட்டு வசதி வாரியத்திற்கு அனுமதி கேட்டும், ரூ.2 கோடி மதிப்பீட்டில் திட்ட மதிப்பீடும் அனுப்பி  வைத்துள்ளோம். அது இறுதிக்கட்டத்தில் உள்ளது. அனு மதி பெற்றவுடன் அப்பணிகளும் நடைபெறும்,” எனத் தெரி வித்தார். எப்படி ஆயினும், சுமார் 12,000 பேர் வசிக்கும் இந்தக்  குடியிருப்பில் பட்டப்பகலில் அடுத்தடுத்து 13 வீடுகளின் பூட்டு உடைக்கப்பட்டு திருட்டுச் சம்பவம் நடந்தது குடி யிருப்பு வாசிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கும் சூழ லில், பாதுகாப்பை பலப்படுத்த வேண்டியது அரசின் அத்தி யாவசிய கடமை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டி யுள்ளது. கலைஞரின் தொலைநோக்குத் திட்டம், சில அதி காரிகளின் அலட்சியத்தாலும், சுயநலத்தாலும் சிதைக் கப்படுகிறதோ என்ற ஆதங்கக் குரல் ஓங்கி ஒலிக்கிறது. -கவி

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.