திருப்பூரில் அரசு ஊழியர் ஆர்ப்பாட்டம்
12 Feb 2026, 4:57 pm
<p><strong>திருப்பூரில் அரசு ஊழியர் ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>திருப்பூர், பிப்.12 - திருப்பூர் மாவட்டம் தாராபுரம், உடு மலை, மடத்துகுளம், அவிநாசி ஆகிய பகுதி களில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு வியாழன்று பிப்.12 வேலைநிறுத்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தாராபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு வட்டக்கிளை தலைவர் க.செந்தில் குமார் தலைமை ஏற்றார். நிர்வாகி ஆ.மணி மொழி வரவேற்றார். மாவட்ட துணைத் தலைவர் ப.ஆறுமுகம் தொடக்கி வைத்தார். அரசுத்துறைகளில் அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும், காலிப்பணி யிங்்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. வட்டக்கிளைச் செயலாளர் எல்.தில்லை யப்பன் விளக்கிப் பேசினார். வருவாய்த் துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் தங் கவேல், ஓய்வூதியர் சங்க வட்டக்கிளை செயலாளர் செ.ரங்கநாதன் வாழ்த்திப் பேசி னர். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் மா.பாலசுப்பிரமணியன் நிறைவுரை ஆற்றி னார். வட்டக்கிளை இணைச் செயலாளர் எஸ். சிவராசு நன்றி கூறினார். உடுமலை: உடுமலைப்பேட்டை வட்டாட்சியர் அலு வலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டக் கிளை செயலாளர் வெங்கிடுசாமி தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்கத் தின் மாநிலச் செயலாளர் அம்சராஜ் சிறப்பு ரையாற்றினார். மேலும் அரசு தொழிற் பயிற்சி பள்ளி சங்கத்தின் ரமேஷ்குமார், ஊரக வளர்ச்சி துறையின் நாச்சிமுத்து, சாலைப் பணியாளர் சங்கத்தின் செல்லத்துரை, சத்து ணவு ஊழியர் சங்கத்தின் எலிசபெத் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். நிறைவாக இஎஸ்ஐ சங்கத்தின் தங்க பாண்டி நன்றி கூறினார். மடத்துக்குளம்: மடத்துக்குளம் வட்டாட்சியர் அலுவ லகத்தின் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு அரசு ஊழியர் சங்கத்தின் மடத்துக் குளம் வட்டக்கிளை தலைவர் ரமேஷ்கு மார் தலைமை வகித்தார். வட்டக் கிளை செய லாளர் பாலு, அனைத்து துறை ஓய்வூதியர் சங் கத்தின் வட்டக் கிளை செயலாளர் கருணா நிதி, மற்றும் சங்கத்தின் மாவட்ட இணைச் செயலாளர் வைரமுத்து ஆகியோர் கண்டன உரையாற்றினார். முடிவில் வட்டக்கிளை துணைத் தலைவர் பாலமுருகன் நன்றி கூறி னார். அவிநாசி: அவிநாசி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வட்டக் கிளை செயலாளர் கருப்பன், மகளிர் துணைக் குழு அமைப்பாளர் அன்னம், சண்முகசுந்த ரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். எல்ஐசி ஆர்ப்பாட்டம் தாராபுரம் எல்.ஐ.சி அலுவலகம் முன்பு நடைபெற்ற வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத் திற்கு காப்பீட்டு ஊழியர் சங்க கிளைச் செய லாளர் செல்வராஜ் தலைமை ஏற்றார். பென்ச னர் சங்கத்தின் திருமலைசாமி ஆர்ப்பாட்ட முழக்கங்களை எழுப்பினார். பென்சனர் சங்க கோவை கோட்ட செயற்குழு உறுப்பினர் சண் முகசுந்தரம் வேலை நிறுத்தத்தின் நோக்கங்க ளையும் கோரிக்கைகளையும் விளக்கிப் பேசி னார். ஆயுள் காப்பீட்டு கழக ஊழியர் சங்கத் தின் தலைவர் யோகரூபிணி நன்றி கூறி னார்.</p>
