அரசு மருத்துமனைகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்
11 Nov 2025, 3:41 pm
<p><strong>அரசு மருத்துமனைகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>திருப்பூர், நவ. 11 - புதிதாகத் திறக்கப்பட்டுள்ள அரசு மருத்துவமனைகளில் காலிப்பணி யிடங்களை நிரப்ப வலியுறுத்தி தமிழ் நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடந் தது. திருப்பூர் தாராபுரம் சாலையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத் துவமனையில் தமிழ்நாடு அரசு டாக்டர் கள் சங்கம் சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட் டத் தலைவர் மருத்துவர் பிரகாஷ் தலைமை வகித்தார். தமிழகத்தில் புதிய தாக திறக்கப்படும் மருத்துவமனைக ளில் மருத்துவர்கள், மருத்துவ பணியா ளர்கள் பணியிடங்கள் புதியதாக நிரப் பப்படாமல் ஏற்கனவே உள்ள மருத்து வக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக ளில் உள்ள மருத்துவர்கள் பணி செய்ய நிர்பந்தம் செய்யப்படுகிறார்கள். ஆட் குறைப்பு செய்யப்படும் மருத்துவம னைகளில் நோயாளிகள் பாதிக்கப்ப டும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே தமிழ் நாடு அரசு மறுசீரமைப்பைக் கைவிட வேண்டும், புதிய அரசு மருத்துவமனை களுக்கு உரிய மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும், ஏற்கனவே காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவ பணியாளர்கள் நியமனம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இதில் பங்கேற்ற மருத்து வர்கள் இந்த கோரிக்கைகளை வலியு றுத்தி முழக்கங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்ட பொதுச்செயலாளர் சுரேஷ் ராஜ்குமார் மற்றும் அனைத்து பிரிவு மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.</p>
