மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை அரசு மருத்துவர் சிறையில் அடைப்பு!
17 Mar 2026, 3:26 pm
<p><strong>மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை அரசு மருத்துவர் சிறையில் அடைப்பு!</strong></p>
<p>உதகை, மார்ச் 17- உதகை அரசு மருத்துவக்கல்லூரி யில் பயிலும் மாணவியை பாலியல் வன் கொடுமை செய்த அரசு மருத்துவரை காவல் துறையினர் கைது செய்து சிறை யில் அடைத்தனர். நீலகிரி மாவட்டம், உதகை அரசு மருத்துவக்கல்லூரியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 500க்கும் மேற் பட்ட மாணவ, மாணவிகள் படித்து வரு கின்றனர். இதில் வடமாநிலத்தை சேர்ந்த 22 வயது மருத்துவ மாணவி, கடந்த சில நாட்களாக தேர்வில் வெற்றி பெற முடியுமா? என்ற சந்தேகம் ஏற்பட்ட தால் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதனை சாதகமாக பயன் படுத்தி கொண்ட, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றும் மருத்துவர் ஓம் பிரகாஷ் (44) என்பவர், மாணவியை தனியாக அழைத்து பேசி வந்துள்ளார். இந்நிலையில், தேர்வு தொடர்பாக பேசுவதற்காக உதகையி லுள்ள ஒரு தனியார் விடுதிக்கு மாணவியை திங்களன்று வரவழைத் துள்ளார். அப்போது தேர்வில் வெற்றி பெற வைப்பதற்காக மேலிடத்தில் பேசி விட்டேன் என்று ஆசைவாா்த்தை கூறி, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் அதிர்ச்சிய டைந்த அந்த மாணவியின் அலறல் கேட்டு வந்த விடுதி ஊழியர்கள் உடனடி யாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த உதகை மத்திய காவல் நிலைய ஆய்வாளர் அன்பரசு தலைமை யிலான போலீசார், மருத்துவர் ஓம் பிர காஷ், சம்பந்தப்பட்ட மாணவி மற்றும் விடுதி நிர்வாகத்தினரிடம் விசாரணை நடத்தினர். அப்போது மதுபோதையில் ஓம் பிரகாஷ், மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததும், மாணவியை அவா் வீடியோ எடுத்து வைத்திருந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கு உதகை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு, ஓம் பிரகாஷை காவல் துறையினர் கைது செய்தனர். இதன்பின் உதகை மகிளா நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத்தனர்.</p>
