தீக்கதிர் விரைவு செய்திகள்
28 Nov 2025, 2:28 pm

தேர்வு தேதி மாற்றம்

சென்னை: தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவியர்களுக்கு அரசுத் தேர்வு இயக்ககத்தால் 1991-1992 முதல் தமிழ்நாடு ஊரக திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 2025-2026 கல்வியாண் டிற்கான தேர்வு சனிக்கிழமை (நவ.29) நடைபெறவிருந்தது. டிட்வா புயலால் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இத்தேர்வு டிசம்பர் 6 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

தொழிலாளர் விரோத சட்டங்களுக்கு எதிராக டிச.1-இல் ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி: ஒன்றிய அரசால் நிறைவேற்றப்பட்ட தொழிலாளர்களை வஞ்சிக்கக் கூடிய 4 தொகுப்பு சட்டங்க ளைக் கண்டித்து, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் டிசம்பர் 1 (திங்கட்கிழமை) அன்று மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.பாஸ்கரன் மற்றும் பொதுச் செயலாளர் வெ.சோமசுந்தரம் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில், “44 மத்திய தொழிலாளர் நலச் சட்டங்களை நீக்கிவிட்டு, தனியார்மயத்தை ஊக்குவித்து, தொழிலா ளர்களுக்கு எந்தப் பயனும் தராத, மாறாக, கார்ப்பரேட் நிறு வனங்களுக்குச் சாதகமான 4 தொகுப்பு சட்டங்களை ஒன்றிய அரசு நிறைவேற்றியுள்ளது. புதிய சட்டங்கள், ஆலைகளை மூடுவதற்கு இருந்த 100 பேர் உச்சவரம்பை 300 பேர் என்று உயர்த்தி, நிரந்தரத் தன்மை உள்ள தொழிலாளர்களின் வேலைப் பாதுகாப்பை பறிக்கிறது. இதனால், 90% தொழிலாளர்கள், முதலாளி களின் தயவில் மட்டுமே நீடிக்க முடியும் என்ற நிலை உரு வாகியுள்ளது. மேலும், குறைந்த கூலிக்கு காண்ட்ராக்ட்/குறுகிய காலத் தொழிலாளர்களை நியமிக்கும் வசதிகளை யும், புதிய தொழிற்சங்கங்கள் உருவாவதற்கு எதிரான கடு மையான கட்டுப்பாடுகளையும் இச்சட்டம் கொண்டுள்ளது” எனக் கூறப்பட்டுள்ளது. இந்தத் தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க விரோதச் சட்டங் களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழ்நாடு முழுவதும் உள்ள வட்டத் தலைநகரங்களில் டிசம்பர் 1 அன்று கண்டன ஆர்ப்பாட்டங்களை எழுச்சியுடன் நடத்தும்படி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்த அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகம் கோரிக்கை

சென்னை: அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியி யல் கல்லூரி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வை விரைந்து நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் கோரியுள்ளது. இது தொடர்பாக கழகத்தின் பொதுச் செயலாளர் சோ. சுரேஷ் விடுத்துள்ள அறிக்கையில், “அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பணியாற்றி வரும் ஆசிரி யர்களுக்கு ஆண்டு தோறும் இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு பணி இடமாறுதல் கலந்தாய்வு நவம்பர் மாதம் நடைபெற்றது. இந்த ஆண்டும் பணி இடமாறுதலை விரைந்து நடத்த ஜூன் மாதத்திலிருந்தே கோரி வந்தோம். நவம்பர் மாதத்தில் நடத்தப்படும் என்று உயர்கல்வித் துறை அதிகாரி கள் உறுதி அளித்தார்கள். நவம்பர் மாதம் முடியும் தருவாயி லும், கலந்தாய்வு நடத்த அரசாணை வெளியிடவில்லை. எனவே, காலதாமதமின்றி கலந்தாய்வினை உடனே நடத்த அரசாணை வெளியிட வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

சிபிஐ அதிகாரிகள் விசாரணை

கரூர்: கடந்த செப்.27 ஆம் தேதி, கரூர் வேலுச்சாமி புரத்தில் தவெக சார்பில் நடைபெற்ற நடிகர் விஜய்யின் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, கரூர் சுற்றுலா மாளிகையில் சிபிஐ அதிகாரி கள் தங்கி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், வெள்ளிக்கிழமை கரூர் நகர காவல் துணைக் கண்காணிப்பாளர் செல்வராஜ் மற்றும் உயிரிழந்தவர் களின் குடும்பத்தினரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற் கொண்டனர்.