தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

2 Jan 2026, 3:33 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

தென்னிந்திய அளவிலான போட்டியில் பங்கேற்க அரசுக்கல்லூரி மாணவர் தேர்வு

தருமபுரி, ஜன.2- தென்னிந்திய பல்கலைக்கழகங்களுக்கிடையான இறகுபந்து போட்டியில் பங்கேற்கும் அரசு கலைக் கல்லூரி மாணவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. சேலம் பெரியார் பல்கலைக்கழக ஆளுகைக்குட் பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான ஆடவர் இறகு பந்து போட்டிகள், அண்மையில் திருச்செங்கோடு கேஎஸ்ஆர் கல்லூரியில் நடைபெற்றது. இப்போட்டிக ளில் தருமபுரி அரசு கலைக்கல்லூரி ஆடவர் இறகு பந்து அணி பங்கேற்று நான்காம் இடம்பெற்றது. இதில் சிறப்பாக விளையாடிய தருமபுரி அரசு கலைக்கல்லூரி யின் தாவரவியல் துறை இரண்டாம் ஆண்டு மாணவர் எஸ்.தீபக் விக்னேஷ், சேலம் பெரியார் பல்கலைக்கழக அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் ஆந்தி ராவில் தென்னிந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடை யிலான ஆடவர் இறகுபந்து போட்டியில் பங்கேற்க வுள்ளார். பெரியார் பல்கலைக்கழக உடற்கல்வித் துறை இயக்குநர் கே.வெங்கடாசலம், அவருக்கு வாழ்த்து தெரிவித்து வழி அனுப்பினார். தொடர்ந்து, பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட தேர்வு கடிதத் தினை வழங்கி பாராட்டி, கல்லூரி முதல்வர் கோ.கண் ணன், கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் கு பாலமுரு கன், பேராசிரியர்கள் வழியனுப்பி வைத்தனர்.

ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு நிலையம்  குமாரபாளைம் நகராட்சியிடம் கோரிக்கை

நாமக்கல், ஜன.2- விசைத்தறி தொழிலை பாதுகாக்க ஒருங்கிணைந்த  சுத்திகரிப்பு நிலையம் அமைக்க தீர்மானம் நிறை வேற்ற குமாரபாளையம் நகர்மன்ற கூட்டத்தில் வலியு றுத்தப்பட்டது. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகரமன்ற சாதாரணக் கூட்டம், தலைவர் விஜய கண்ணன் தலை மையில் புதனன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நகராட்சியில் உள்ள 33 வார்டு நகர மன்ற உறுப்பினர் களில் திமுகவைச் சார்ந்த 15 உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். அதிமுக உறுப்பினர்கள் கூட்டத் திற்கு வராமல் புறக்கணித்தனர். நடைபெற்ற நகரமன்ற கூட்டத்தில் 34 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து தமிழக முதல்வரின் உத்தரவுப் படி குமாரபாளையம் நகராட்சியில் நியமன உறுப்பி னராக நியமிக்கப்பட்ட புதிய நகர் மன்ற உறுப்பினர் பிர பாகரன் கூட்டத்தில் பேசினார். அப்பொழுது குமார பாளையம் நகராட்சி விசைத்தறி தொழில் நிறைந்த நகராட்சி பகுதியாகும். விசைத்தறி தொழிலை நம்பி பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்ந்து வரு கின்றனர்.  ஆனால், தற்பொழுது நகரின் முக்கியத் தொழி லான விசைத்தறி தொழில் சாய தொழிற்சாலைகள் மூடி யதால், வேலை இழந்து தவிக்கும் சூழல் ஏற்பட்டுள் ளது. ஏற்கனவே ஒன்றிய அரசும், மாநில அரசும் ஒருங்கி ணைந்த சுத்திகரிப்பு நிலையம் அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே மாநில அரசே ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வலி யுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதை கேட்டுக் கொண்ட நகர் மன்ற தலைவர் இந்த தீர்மானம் நிறைவேற்ற நகர் மன்றத்திற்கு அதிகாரம் உள்ளதா? என ஆராய்ந்து தீர்மானம் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.

பூட்டை உடைத்து வீட்டில் கொள்ளை

தருமபுரி, ஜன.2- அதியமான் கோட்டை பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து, நகை மற்றும் பணம் கொள்ளைய டிக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர். தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டை அருகே உள்ள பாலஜங்கமனஅள்ளி பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார் (54). இவர் சென்னை பெருங்களத்தூர் பகு தியில் உள்ள பொறியியல் கல்லூரியில் முதல்வராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், ரவிக்குமார் தனது குடும்பத்தினருடன் தஞ்சாவூர் சென்றுவிட்டு வியாழனன்று வீடு திரும்பினர். அப்போது, வீட்டின்  பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 10 பவுன்  நகை, ரூ.4 லட்சம் திருடுபோனதை கண்டு அதிர்ச்சிய டைந்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் அதியமான் கோட்டை காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆழியார் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு

பொள்ளாச்சி, ஜன.2- ஆழியார் அணையிலிருந்து புதிய ஆயக் கட்டு பாசனத்திற்காக வெள்ளியன்று திறக்கப்பட்ட தண்ணீரை, மலர்கள் தூவி விவ சாயிகள் வரவேற்றனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அணையின் புதிய  ஆயக்கட்டு பாசனத்தில் உள்ள 22 ஆயிரத்து 332 ஏக்கர் விளை நிலம் பயன்பெறும் வகை யில், தண்ணீர் திறந்து விட வேண்டும் என  விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இத னையேற்று ஆழியார் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. அதன்படி, வெள்ளியன்று அணையிலிருந்து பொள்ளாச்சி, வேட்டைக் காரன் புதூர், ஆழியார் ஊட்டுக்கால்வாய் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. கால்வாய் வழியாக வெளியேறிய தண் ணீரை, புதிய ஆயக்கட்டு பாசன விவசாயி கள் மற்றும் நீர் பாசனத்துறை அதிகாரிகள் மலர் தூவி வரவேற்றனர். 135 நாட்களுக்கு உரிய இடைவெளி விட்டு 2 ஆயிரத்து 734 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்து விடப் படவுள்ளது.

6 டன் கலப்பட வெல்லம் பறிமுதல்

சேலம், ஜன.2- சேலம் மாவட்டத்தில் உணவுப் பாது காப்புத் துறையினர் நடத்திய சோதனை யில், 6 டன் கலப்பட வெல்லம் பறிமுதல் செய்யப்பட்டது. பொங்கல் பண்டிகை நெருங்கிவரும் நிலையில், சேலம் மாவட்டத்தில் உள்ள பல் வேறு கரும்பாலைகளில் வெல்லம் தயா ரிப்புப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. பல் வேறு இடங்களில் நிறம் மற்றும் எடைக்காக வெல்லம் தயாரிப்பில் கலப்படம் செய்யப்படு வதாக உணவுப் பாதுகாப்பு துறைக்கு புகார் கள் வந்தன. இதனடிப்படையில், உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் பல்வேறு கரும்பாலைகளில் முன்னறிவிப்பின்றி திடீர் சோதனை மேற் கொண்டு வருகின்றனர். தாரமங்கலம், ஓம லூர், காமலாபுரம், தீவட்டிப்பட்டி, எடப்பாடி, கொங்கணாபுரம் ஆகிய பகுதிகளில் சோதனை நடைபெற்றது. கடந்த 10 நாட்க ளாக நடைபெற்ற சோதனையில் கலப்பட வெல்லம் 6 டன்னும், கலப்படமாக சேர்க்க இருப்பு வைத்திருந்த வெள்ளை சர்க்கரை  3 டன்னும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், கலப்பட வெல்லம் தயாரித்த 15 ஆலைக ளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக வும், விதிமுறைகளை பின்பற்றாத ஆலை  ஒன்று இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக வும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

உதகை, ஜன.2- மசினகுடி பகுதியில் வெள்ளியன்று யானை தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வெளிமண்டல வனப் பகுதியில் அமைந்துள்ள மசினகுடி பகுதியை  சேர்ந்தவர் மணிகண்டன் (50). தனது குடும் பத்துடன் மசினகுடி பகுதியில் வசித்து வந்த இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், வெள்ளியன்று அதிகாலை தனது வீட்டிலிருந்து மசினகுடி பகுதியில் உள்ள தேநீர் கடைக்கு சென்றுள்ளார். அப் போது வனப்பகுதியில் இருந்து வெளியேறி சாலையில் உலா வந்த யானை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அப்பகுதி மக் கள் உடனடியாக வனத்துறையினருக்கு தக வல் அளித்துள்ளனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானையை விரட்டி மணிகண்டனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக உதகை அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும், உயிரிழந்தவரின் குடும் பத்திற்கு அரசு சார்பில் வழங்கப்படும் இழப் பீட்டு நிவாரண தொகை வழங்குவதற்கான நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற் கொண்டுள்ளனர். யானை தாக்கி கூலித்  தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.

தோழியை கொலை செய்தவருக்கு ஆயுள்!

உதகை, டிச.2- தங்க நகைக்காக தோழியை கொலை செய்த இளம் பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து உதகை மகிளா நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்த உபதலை ஆலோரை பகுதியைச் சேர்ந்தவர் ஜோதிமணி. இவரது தோழி நிர்மலா எஸ்தர் (30). கடன் சுமையால் தவித்த நிர்மலா எஸ்தர்,  கடந்த 1.10.2022 அன்று ஜோதிமணியிடம் பணம் கேட்டுள் ளார். அவர் தர மறுக்கவே, ஜோதிமணி அணிந்திருந்த தங்க நகையைப் பறிக்கத் திட்டமிட்டார். தனியாக அழைத்துச் சென்று நகையைக் கேட்டபோது ஏற்பட்ட தகராறில், ஜோதி மணியை கீழே தள்ளிவிட்டு தலையில் காயப்படுத்தியுள் ளார். பின்னர் தனது மாமனார் மணி (75) என்பவரின் உதவி யுடன், சேலையால் ஜோதிமணியின் கழுத்தை இறுக்கிக் கொலை செய்துள்ளார். தனது தாயை நிர்மலா எஸ்தர் அழைத்துச் சென்றதை ஜோதிமணியின் மூத்த மகள் பார்த்திருந்தார். நீண்ட நேரமா கியும் தாய் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தி னர் அளித்த புகாரின் பேரில், அருவங்காடு போலீசார் விசா ரணை நடத்தினர். விசாரணையில் நகைக்காக ஜோதிமணி கொலை செய்யப்பட்டு, உடல் மறைத்து வைக்கப்பட்டிருந் தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நிர்மலா எஸ்தர் மற்றும் அவரது மாமனார் மணி ஆகிய இருவரையும் போலீ சார் கைது செய்தனர். உதகை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், நீதிபதி எம்.செந்தில்குமார் வெள்ளியன்று தீர்ப்ப ளித்தார். அரசு தரப்பு குற்றச்சாட்டுகள் சந்தேகமின்றி நிரூபிக் கப்பட்டதால், நிர்மலா எஸ்தருக்கு ஆயுள் தண்டனையும், கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது மாமனார் மணிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார். தீர்ப்பைத் தொடர்ந்து நிர்மலா எஸ்தர் கோவை பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு

மேட்டுப்பாளையம், ஜன.2- சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி, மலை சாலை களில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஜன.1 முதல் 31 ஆம் தேதி வரை தேசிய சாலை பாதுகாப்பு வார விழா கடைப்பிடிக்கப்பட்டு வரு கிறது. இதன்ஒருபகுதியாக கோவை மாவட்டம், மேட்டுப் பாளையத்தில் சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு  நிகழ்ச்சி வெள்ளியன்று நடைபெற்றது. வட்டார போக்குவ ரத்து அலுவலர் சத்தியகுமார், மேட்டுப்பாளையம் துணை  காவல் கண்காணிப்பாளர் பாஸ்கர் உள்ளிட்டோர், நீலகிரி மாவட்டத்திலிருந்து மேட்டுப்பாளையத்திற்கு வந்த சுற்று லாப் பயணிகள், வாகன ஓட்டிகளுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கியும், சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.