மடிக்கணினி வழங்கக்கோரி அரசுக்கல்லூரி மாணவர்கள் போராட்டம்
18 Feb 2026, 3:04 pm
<p><strong>மடிக்கணினி வழங்கக்கோரி அரசுக்கல்லூரி மாணவர்கள் போராட்டம்</strong></p>
<p>திருவண்ணாமலை, பிப்.18- திருவண்ணாமலை கிரிவலப் பாதை யில் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கலைக்கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு களில் சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வரு கின்றனர். குறிப்பாகக் காலை மற்றும் நண்பகல் எனச் சுழற்சி முறையில் மாணவர்கள் படித்து வருகின்றனர். திருவண்ணாமலை, வேட்டவலம், கீழ்பென்னாத்தூர், ஆவூர், கலசபாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமப்புற மாணவர்கள் இங்குப் பயில்கின்றனர். இந்நிலையில், மாணவர்கள் உடனடியாக மடிக்கணினி வழங்க வலியுறுத்தி, அரசு கலைக்கல்லூரி முன்பு முதுகலை மாணவர்கள் வகுப்பு களைப் புறக்கணித்துத் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசால் 10 லட்சம் மாணவர்களுக்கு ‘உலகம் உங்கள் கையில்’ திட்டத்தின் கீழ் மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் முதுகலை மாணவர்களையும் இணைத்து, மடிக்கணினி திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இந்திய மாணவர் சங்க மாநிலக் குழு உறுப்பினர் இமயவர்மன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்டச் செயலாளர் கோபிநாத் உரையாற்றினார். தொடர்ந்து, மடிக்கணினி வழங்கக் கோரிக் கல்லூரி முதல்வருக்குக் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், அரசுக்குத் தகவல் தெரிவிப்பதாகவும் அவர் வாக்குறுதி அளித்தார். இத னால் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. போராட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டக் குழு உறுப்பினர்கள் மனோஜ் குமார், அரவிந்த், கதிரவன் மற்றும் கிளை உறுப்பினர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.</p>
