தென்கொரியா செல்லும் அரசுக் கல்லூரி மாணவர்
27 Nov 2025, 3:11 pm
<p>திருப்பூர், நவ.27- நான் முதல்வன் திட்டத் தில் சிக்கண்ணா கலை மற் றும் அறிவியல் கல்லூரி மாணவர் தென்கொரியா செல்வதற்கு தேர்வாகியுள் ளார். தமிழ்நாடு அரசின் உயர் கல்வித் துறைக்கான, “நான் முதல்வன்” திட்டத்தின் ஸ்கவுட் (SCOUT) திட் டம் மூலம் வெளிநாடுகளில் பயிற்சி பெற்று உயரிய நிறுவனங்களில் மாணவர்கள் பணி அமர்த்தப்படுகின்றனர். இதற்காக பல கட் டத்தேர்வுகள் நடத்தப்படுகிறது. அத்தகைய தேர்வுகளில் பங்கேற்ற 7,000 பேரில் இருந்து 21 மாணவர்கள் மட்டுமே இந்தப் பயிற்சிக்குத் தேர்வு செய்யப்பட்டுள் ளனர். அந்த 21 மாணவர்களில் ஒருவராக திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவர் முஹம்மது அனாஸ் தேர்வாகி உள்ளார். தமிழகத்தில் இருந்து தேர்வு செய் யப்பட்ட மாணவர்கள் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் தென்கொரியா நாட்டிற்குச் செல்ல இருக் கின்றனர். பயிற்சி முடித்த பின்னர் திறமையின் அடிப்ப டையில் வெளிநாட்டு நிறுவ னங்களே அவர்களைப் பணி யில் அமர்த்திக் கொள்ளும் வாய்ப்பும் உள்ளது. கோவை மண்டலத்திற்குட்பட்ட மாவட் டங்களில் உள்ள கல்லூரிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட திருப்பூர் சிக்கண்ணா அரசுக் கல்லூரியின் முஹம்மது அனாஸ் என்ற மாணவரை, கோவை மண்டல கல்லூ ரிக்கல்வி இணை இயக்குநர் செண்பக லட் சுமி, கல்லூரி முதல்வர் கிருஷ்ணன், பேராசிரி யர்கள் முன்னாள் மாணவர் சங்கத்தினர் வாழ்த்திப் பாராட்டினர்.</p>
